டில்லி

ர்நாடக மாநிலத்தில் தண்ணீரே இல்லை என அம்மாநில துணை முதல்வர் டி கே சிவகுமார் கூறி உள்ளார்.

தமிழகத்துக்கு கர்நாடகாவில் இருந்து 5 ஆயிரம் கன அடி தண்ணீரை அடுத்த 15 நாட்களுக்குத் திறந்துவிடவேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் நேற்று முன் தினம் உத்தரவிட்டு இருந்தது. தற்போது இதன்படி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

கர்நாடகா நீர்வளத்துறை அமைச்சரும், துணை முதல்வருமான டி.கே.சிவக்குமார் அவசரமாக டில்லி சென்று சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச்  சந்தித்தார்.

அப்போது அவர்,

“கர்நாடகாவுக்குத் தலைவலியாகத் தமிழகத்திற்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  தற்போது உள்ள சூழ்நிலையில் கபினி, கே.ஆர்.எஸ். ஆகிய அணைகளில் இருந்து தண்ணீரை தமிழகத்திற்குத் திறந்துவிட்டால் இனிவரும் காலங்களில் குடிநீருக்குப் பஞ்சம் ஏற்படும் சூழல் உருவாகும்.

தற்போது கர்நாடகாவில் தண்ணீரே இல்லை. ஆனால் மேகதாது அணை இருந்திருந்தால், இதுபோன்ற பிரச்சனை வந்திருக்காது.  எனவே நாங்கள் மேகதாது அணை வேண்டும் என்கிறோம். தமிழகத்துக்கு தற்போதைய சூழலில் தண்ணீர் திறந்துவிட்டால், அது கர்நாடக விவசாயிகளையும் பாதிக்கும். “

என்று கூறினார்.

மேலும் தமிழகத்துக்கு 5 ஆயிரம் கன அடி நீரை வழங்குவதைத் தடுக்கவேண்டும் என்ற நோக்கில் டி.கே.சிவக்குமார் சட்ட வல்லுநர்கள் சந்திப்பை நடத்தியதாகவும் இது தொடர்பாகக் காவிரி மேலாண்மை ஆணையத்தில் வலியுறுத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.