பெங்களூரு
சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்டோர் தனது மக்ன்மீதுள்ள அன்பினால் அடிக்கடி வீட்டுக்கு வருவதாக டி கே சிவகுமாரின் தாய் கூறி உள்ளார்.
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரும் மாநில முன்னாள் அமைச்சருமான டி கே சிவகுமார மீது பாஜக அரசு பல புகார்களைக் கூறியது.
அதையொட்டி சிபிஐ, வருமானவரித்துறை, அமலாக்கத்துறை ஆகியோர் அவருடைய இல்லத்திலும் அலுவலகத்திலும் சோதனை இட்டனர்.
அப்போது பல ஆவணங்கள் கிடைத்ததாகக் கூறப்பட்டாலும் அது குறித்த விவரங்கள் எதுவும் அதிகாரப் பூர்வமாக வெளியாகவில்லை.
அதன் பிறகு மீண்டும் அவர் வீட்டில் சோதனைகள் அடிக்கடி நடந்தன.
இந்நிலையில் டி கே சிவகுமாரின் தாய் கவுரம்மா,
“எனது மகன் மீது சிபிஐ, வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறைக்கு மிகவும் அன்புள்ளது,
அதனால் அடிக்கடி அவர்கள் இங்கு வருகின்றனர்.
அவர்கள் வந்து சோதனை செய்து எதை வேண்டுமானாலும் எடுத்துச் செல்லட்டும்.
எதுவும் கிடைக்காவிட்டால் எனது மகனைக் கைது செய்துக் கொள்ளட்டும்”
எனக் கிண்டலாகக் கூறி உள்ளார்.