சென்னை:
தீபாவளி பண்டிகையையொட்டி, அதற்கு முந்தைய நாளான 26ந்தேதி சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து உள்ளது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை 27ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அதற்கு முந்தைய நாள் சனிக்கிழமை வேலைநாள். அதுபோல, 28நதேதி திங்கட்கிழமையும் வேலைநாள்.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட நகரப் பகுதிகளில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளியைக் கொண்டாட செல்லும் மக்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்களின் நிலை கேள்விக்குறியானது.
இதையடுத்து ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன. இந்த நிலையில், தீபாவளிக்கு முந்தைய நாள், அதாவது அக்டோபர் 26 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி அக்டோபர் 26 ஆம் தேதி சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதன் மூலம் பள்ளி செல்வது பாதிக்கப்படாமல் ஒரு நாள் முன்பாகவே குழந்தைகளை கூட்டிக்கொண்டு பெற்றோர்கள் சொந்த ஊருக்கு சென்று தீபாவளியை சிறப்பாக கொண்டாட முடியும் என்று தெரிவித்து உள்ளது.