அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்….
தீபாவளி என்றால் என்ன?
‘தீபம்’ என்றால் ஒளி, விளக்கு. ‘ஆவளி‘ என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும்.
தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம்.
ஒவ்வொருத்தர் மனதிலும் இருட்டு என்ற அகங்காரம், பொறாமை, தலைக்கனம் உள்ளது. அவற்றை அகற்றி, தீய குணத்தை எரித்து, ஒளி ஏற்ற வேண்டிய நாளே தீபாவளி ஆகும்.
எப்படி கொண்டாட வேண்டும்
தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழவேண்டும். வீட்டின் மூத்த உறுப்பினர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறுவது சாலச்சிறந்தது
பின், எண்ணெய்க் குளியல் (கங்கா குளியல்) செய்ய வேண்டும். எண்ணை குளியலுக்காக கிராமங்களில் முந்தைய நாள் இரவே நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சி தயாராக வைத்து இருப்பார்கள்.
இந்த எண்ணை தேய்த்து, சீயக்காய் போட்டு குளிப்பது உடலுக்கு குளிர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும்.
அதன்பின்னர் புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் தீபாவளி கொண்டாட்டத்தை ஆரம்பித்து கொண்டாடி மகிழ்வர்.
தமிழகத்தை பொறுத்தவரை பெரும்பாலானவர்கள் தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே விரும்பு கின்றனர். பெண்கள் புடவையும் (குறிப்பாக பட்டுப்புடவை) ஆண்கள் வேட்டியும் உடுப்பது. தீபாவளி அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையான நாதசுவரம் ஒலிக்கும்.
பண்டிகை என்றாலே அதுவும் இந்துக்களின் பண்டிகை என்றாலே நாவிற்கு சுவையான பலகாரங்கள் செய்வது நமது முன்னோர்களின் வழக்கம். அதுபோல் பெரும்பாலான வீடுகளில் பலகாரங்கள் செய்து அதை கடவுளுக்கு படைத்து உண்து வழக்கம்.
ஆனால், நவின யுகத்தில் உள்ள பெண்களுக்கு பலகாரங்கள் செய்ய தெரிவதுமில்லை, அதற்கான நேரமுமில்லாத காரணத்தால் மக்களின் கூட்டம் சுவிட் கடைகளை நோக்கியே நகருகிறது.
ஒவ்வொரு வீட்டிலும் தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பே முறுக்கு, அதிரசம், லட்டு போன்ற இனிப்பு கார வகைகளை செய்ய ஆயத்தமாகிவிடுவார். அவ்வாறு செய்யப்படும் பலகாரங்களை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுத்து மகிழ்வர். வீட்டில் உள்ள பெரியோர்களின் காலில் விழுந்து ஆசிகள் பெறுவர்.
பெரும்பாலானவர்கள் வீடுகளின் அன்று அசைவ சமையல் இருப்பதும் உண்டு. இதன் காரணமாக, நாம் உண்ட உணவுகள் செரிமானத்திற்கு ஏற்ப தீபாவளி லேகியம் இரவில் உண்பதும் மரபு.
தீபாவளி அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும், சாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும்.