சென்னை:
தீபாவளி பண்டிகைக்கு ரூ.200 கோடிக்கு இனிப்புகளை விற்பனை செய்ய ஆவின் நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

கடந்த 2021 தீபாவளி நேரத்தில், 82 கோடி ரூபாய் அளவிற்கு இனிப்பு வகைகள், நெய் ஆகியவை விற்பனை செய்யப்பட்டன. நடப்பாண்டு அக்டோபர் 24ல் தீபாவளி பண்டிகை வருகிறது.

இந்த தீபாவளி பண்டிகைக்கு, 200 கோடி ரூபாய் அளவிற்கு இனிப்புகளை விற்பனை செய்ய, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.