2025 FIDE உலகக்கோப்பை செஸ் இறுதி ஆட்டத்தில் திவ்யா தேஷ்முக் வெற்றி பெற்றுள்ளார்.

கோனேரு ஹம்பிக்கு எதிராக இன்று நடைபெற்ற டை-பிரேக்கரில் திவ்யா தேஷ்முக் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

முன்னதாக நேற்று நடைபெற்ற இரண்டு சுற்று போட்டிகளும் டிரா ஆனதை அடுத்து இருவருக்கும் இடையே இன்று வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் டை-பிரேக்கர் சுற்று நடைபெற்றது.

ஆரம்பம் முதலே சுறுசுறுப்பாக காய்களை நகர்த்திய திவ்யா தேஷ்முக் சக இந்திய வீரரான கோனேரு ஹம்பியை திணறடித்தார்.

இதன் மூலம் FIDE உலகக்கோப்பை செஸ் பட்டத்தை வென்றுள்ள 19 வயதான திவ்யா தேஷ்முக் FIDE உலகக்கோப்பையை இந்திய அணிக்கு முதல் முறையாக பெற்றுத்தந்துள்ளார்.