விருதுநகர்: சதுரகிரி மலைக்கு செல்ல நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி அனுமதி வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார. ஆனால், அங்குள்ள நீரோடைகளில் குளிக்க தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவித்து உள்ளார்.
பிரசித்தி பெற்ற சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மலையின் மீது அமைந்துள்ளது. சுமார், 4500 அடி உயரத்தில் உள்ள இந்த கோவிலில், மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோச நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வனத்துறையால் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று பரவல், மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக, பக்தர்களின் பாதுகாப்பு கருதி, பக்தர்கள் சதுரகிரி மலைக்கு வர தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தொற்றுகுறைந்ததைத் தொடர்ந்து சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு, சதுரகிரி மலைக்கு சென்று பக்தர்கள் தரிசனம் செய்ய மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் மழை வெள்ளம் காரணமாக மீண்டும் தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது, வரும் பவுர்ணமியையொட்டி, சதுரகிரி கோயிலுக்கு நாளை முதல் டிசம்பர் 19ஆம் தேதி வரை செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது இருப்பினும் நீரோடைகளில் பக்தர்கள் குளிக்க அனுமதியில்லை என்று வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.