டோக்லாம் அருகே பூடானுக்கும் சீனாவிற்கும் இடையே சர்ச்சைக்குரிய நிலத்தில் பல புதிய கிராமங்களை சீனா உருவாக்கியுள்ளது. இதற்கான புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், சீன அதிபரோ, அடுத்த நாட்டிற்கு சொந்தமான ஒரு அங்குலத்தைக்கூட கைப்பற்ற விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
சீனா, பூடான், இந்தியா இடையே ஏற்கனவே சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் டோக்லாம் பகுதியில் சீனா பல புதிய கிராமங்களை உருவாக்கி இருப்பதற்கான புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே 13 ராணுவ தளங்களை அமைத்து வருவதாக கடந்த ஆண்டு (2020)ல் செய்தி வெளியான நிலையில், தற்போது புதிய கிராமங்கள் உருவாக்கி இருப்பதற்கான ஆதாரங்கள் வெளியாகி உள்ளது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கிழக்கு லடாக்கில் ஏற்கனவே சிக்கல் உருவாகி இருக்கும் நிலையில், சீனாவின் இந்த நடவடிக்கை மேலும், புதிய சிக்கலை இந்தியாவுக்கு உருவாக்கி இருக்கிறது.
இதுதொடர்பாக வெளியாகி உள்ள புகைப்படங்களில், சர்ச்சைக்குரிய நிலப்பரப்பில், 2020-21 க்கு இடையில் கட்டுமான நடவடிக்கைகள் நடைபெற்றது தெரிய வந்துள்ளது. சர்ச்சைக்குரிய நிலப்பரப்பில், சுமார் 100 கிமீ பரப்பளவில் பல புதிய கிராமங்கள் பரவியுள்ளன.
இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் சீனா இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. சீனாவின் இந்த செயல் இந்தியாவுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.