ஆர்ம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணமான ரூ. 150 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலத்தை திருவள்ளூர் மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் இன்று மீட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஒரக்காட்டில் அரசுக்கு சொந்தமான 14.5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து ‘பொன்வண்டு’ சோப்பு நிறுவனம் தனது சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலையை அமைத்து செயல்பட்டு வந்தது.
தற்போது இந்த சோப்பு நிறுவனம் தனது தயாரிப்பை நிறுத்தி வேறு பெயரில் இயங்கி வரும் நிலையில் சர்ச்சைக்குரிய இந்த நிலத்தை வேறு நபருக்கு கைமாற்றிவிட முயற்சி மேற்கொண்டது.
இந்த முயற்சியில் ஆம்ஸ்ட்ராங் மற்றும் நாகேந்திரன், நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமன் இடையே மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த மோதலே ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணமாக அமைந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில் அரசுக்கு சொந்தமான சர்ச்சைக்குரிய இந்த ஆக்கிரமிப்பு நிலத்தை வருவாய்த்துறையினர் இன்று மீட்டுள்ளனர்.