மும்பையின் மலாட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 14 வது மாடியில் இருந்து விழுந்த திஷா மரணமடைந்தார்.

2020ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்தில் சிவசேனாவின் (யுபிடி தலைவர்) ஆதித்ய தாக்கரே, நடிகர்கள் சூரஜ் பஞ்சோலி மற்றும் டினோ மோரியா உட்பட மேலும் சிலருக்கு பங்கு இருப்பதாகவும்.

கூட்டு பாலியல் வன்கொடுமை காரணமாக தனது மகள் கொலை செய்யப்பட்டிருப்பதாக திஷா சாலியனின் தந்தை சதீஷ் சாலியன் தற்போது புகார் அளித்துள்ளார்.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மேலாளராக பணியாற்றி வந்த திஷா 2020 ஜூன் 14ம் தேதி சுஷாந்த் சிங் ராஜ்புத் இறப்பதற்கு சில தினங்களுக்கு முன் இறந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட சந்தேகம் எழுந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது.

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ஐந்து ஆண்டுகள் கழித்து கடந்த சனிக்கிழமை அன்று அவரது மரணம் மூச்சுத்திணறல் காரணமாகவே ஏற்பட்டது என்பதை உறுதி செய்து வழக்கை முடித்து வைத்தது.

இந்த நிலையில், திஷா சாலியன் மரணம் தொடர்பாக மீண்டும் சர்ச்சையை எழுந்துள்ள நிலையில் இதுதொடர்பான வழக்கு ஏப்ரல் 2ம் தேதி மும்பை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.