அமெரிக்க மாகாண முதன்மை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முரண்பாடு இருந்ததை அடுத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

போர்ட்டோ ரிக்கோ மாகாணத்தில் நடைபெற்ற முதன்மை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அங்கு நடைபெற்ற தேர்தலில் பல வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒவ்வொரு வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையும் மொத்தமாக பதிவான வாக்குகளின் எண்ணிக்கையும் முரண்பாடு இருந்தது.

மேலும், அதில் பதிவான ஒப்புகை சீட்டிற்கும் வேட்பாளர்கள் வாங்கிய வாக்குகளின் எண்ணிக்கைக்கும் வேறுபாடு இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை விநியோகித்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

https://x.com/elonmusk/status/1801977467218853932

இதனால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கைவிட்டு வாக்குசீட்டு முறைக்கு செல்லவேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதேவேளையில், செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்வது சுலபம் என்று பதிவிட்டுள்ள எலன் மஸ்க் வாக்குச் சீட்டு முறைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.