மும்பை:
இருட்டில் பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்ட இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகில் பொவாய் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதி முழுதும் கடந்த 23ஆம் தேதி, இரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது. பகுதியில் வசிக்கும் விஷ்ணு என்ற இளைஞர், பக்கத்து வீட்டு கதவை தட்டியிருக்கிறார். வீட்டினுள் தூக்கத்தில் இருந்த பெண்மணி, தன் கணவர்தான் வந்திருக்கிறார் என்று நினைத்திருக்கிறார். கதவைத் திறந்துவிட்டு, தூக்க கலக்கத்தில் உள்ளே சென்று படுத்துவிட்டார்.
இளைஞரும் உள்ளே சென்று அந்தப் பெண்ணுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த பெண்மணியும், தனது கணவர் என்று நினைத்திருக்கிறார்.
இருவரும் அப்படியே உறங்கிவிட்டனர். மறுநாள் விடியற்காலை அந்த இளைஞர் தனது உடைகளை அணிந்துகொண்டு கிளம்பத் தயாரானார். அப்போது மி்ன்சாரம் வந்திருக்கிறது. விழித்த அந்த பெண்மணி, பக்கத்து வீட்டு இளைஞரைக் கண்டு அலறிவிட்டார். உடனே அக்கம்பக்கத்தினரை கூவி அழைத்தார்.
அந்த இளைஞர் தப்பி ஓடிவிட்டார். அவர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார் அந்த பெண்மணி.