சென்னை

ஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து விசு கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகரும் இயக்குனருமான விசு முதலில் தன்னை அதிமுக வில் இணைத்துக் கொண்டார்.  பிறகு அங்கிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார்.    தமிழக அரசியல் சூழலைக் குறித்த தனது கருத்துக்களையும் தெரிவித்துக் கொண்டு வந்துள்ளார்.   கமலஹாசனின் அரசியல் வருகையை இவர் கடுமையாக விமர்சித்தது பெரும் பரபரப்பை உண்டாக்கியது.  தற்போது ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவு பதிந்துள்ளார்.

அந்தப் பதிவு பின் வருமாறு :

“கான மயிலாட கண்டிருந்த வான்கோழி,

தானும் அதுவாகப் பாவித்து தன் பொல்லாச்சிறகை விரித்து ஆடினால்?!

காட்டுல மயில் அழகா தோகையை விரிச்சு சுப்பரா dance ஆடுமாம்….

உடனே வான் கோழிக்கு அடி வயிறு எரியுமாம்

பொறாமை புடுங்கித் தின்னுமாம்…

 

அதுவும் அசிங்கமான உடம்பை வச்சுக்கிட்டு

கண்றாவியா தத்தக்கா பொத்தக்கான்னு  dance ஆடுமாம்…

ரஜினி நீ மயில்….. மற்ற உதிரி கோஷ்டிகள் வான் கோழி…

நீ ஆடு ராஜ ஆடு…

 

உன் இறகால் நொந்து போன தமிழ் நாட்டு மக்களின்

இருதயங்களை ஆன்மீக வருடல் வருடி இருக்கிறாய்….

நன்றி ரஜினி நன்றி…1

 

–         இயக்குனர் விசு

தனது முக நூல் பக்கத்தில் இவ்வாறு விசு பதிந்துள்ளார்.   ஏற்கனவே முகநூலில் உள்ள பல பாஜக ஆதரவாளர்கள் ரஜினியின் ஆன்மீக அரசியலை வரவேற்று வரும் வேளையில் பாஜக வை சேர்ந்த விசுவும் இதை வரவேற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.