செவ்வாய்க்கிழமை மாலை இயக்குநர் ஷங்கரின் தாயார் முத்துலட்சுமி சென்னையில் காலமானார். அவருக்கு வயது 88.

சென்னையில் ஷங்கருடன் வசித்து வந்த அவரது தாயார் முத்துலட்சுமி வயது மூப்பின் காரணமாக செவ்வாய்க்கிழமை மாலை காலமானார்.

அவரது இறுதிச் சடங்கு புதன்கிழமை இன்று நடைபெறவுள்ளது. சமூக ஊடகங்களில் அடிக்கடி பதிவிட்டு வரும் ஷங்கர் தனது தாயார் மறைவு குறித்து எதுவும் இதுவரைப் பகிரவில்லை.

இயக்குநர் ஷங்கருக்குத் திரையுலகினர், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.