சென்னை

பிரபல திரைப்பட இயக்குநர் ஷங்கர் தனது அடுத்த படம் குறித்து அறிவித்துள்ளர்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர் தற்போது ராம் சரண் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில், ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்திருக்கிறார்.

வருகிற 10-ம் தேதி இப்படம் வெளியாக உள்ளதால், தற்போது புரமோஷன் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அவற்றில் ஒன்றாக நேர்காணல் ஒன்றில் இயக்குநர் ஷங்கர்,கலந்துக் கொண்டார்

அப்போது இயக்குநர் ஷங்கர்

“’எனது அடுத்த படம் வேள்பாரி. அது எனது கனவு படம். ஊரடங்கு காலத்தில் இதன் ஸ்கிரிப்ட் பணியை முடித்தேன். விரைவில் இதன் படப்பிடிப்பை தொடங்கவுள்ளேன்”

என்று தெரிவித்துள்ளார்.