2002ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ‘ஸ்ரீ’’ படத்துக்கு இசையமைத்தவர் டி.எஸ்.முரளிதரன். இப்படத்தில் இடம்பெற்ற ‘வசந்தசேனா’ என்ற பாடல் மிகவும் பிரபலம்.

மனோஜ் பாரதிராஜா தயாரிப்பில் விக்ரம் – மீனா பாடிய ஒரு தனி ஆல்பத்துக்கும் இசையமைத்துள்ளார்.

“வித்தையடி நானுனக்கு” என்ற படத்தை இயக்கி அதில் கதாநாயகனாகவும் நடித்துள்ள டி.எஸ்.முரளிதரன், ராமநாதன் கே.பி என்ற பெயரில் பல படங்களில் பணிபுரிந்துள்ளார்.

இந்நிலையில் டி.எஸ்.முரளிதரன் நேற்று (18.7.21) காலமானார். சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று இறுதிச்சடங்குகள் நடைபெற்றது.