இயக்குனர் ஹரி தற்போது அருண் விஜய்யின் 33-வது படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக பழனியில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் பழனியில் படப்பிடிப்பில் ஈடுபட்டு வந்த இயக்குநர் ஹரி கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது குழுவின் பணியாற்றிய நபருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதனால் படப்பிடிப்பு குழுவினருக்கு கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
இதற்கிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹரிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.