பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே ஏரி ஒன்று தூர்வாருவதற்காக ஜேசிபி மூலம் தொண்டப்பட்ட நிலையில், அங்கிருந்து நூற்றுக்கணக்கான டைனோசர் முட்டைகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இது தொல்லியில் துறையினருக்கு வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த முட்டைகள் பலகோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கூறப்படுகிறது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பண்டைய காலங்களின் அரிய கண்டுபிடிப்புகள், வாழ்க்கை ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட வருகின்றன. சிவகங்கை மாவட்டம் கீழடி உள்பட பல பகுதிகளில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்து வந்த தமிழனின் கலாச்சாரம், அறிவியல் போன்றவற்றிற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்று, வரலாற்றில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தி வருகின்றன. அதுபோல, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும் சில இடங்களில் டைனோர்சர் போன்ற விலங்குகள், மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் வசித்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், பெரம்பலூர் – அரியலூர் சாலையில் உள்ள குன்னம் கிராமத்தில் உள்ள ஏரியை தூர்வாரும்போது 100க்கும் மேற்பட்ட டைனோர் முட்டைகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமினிறி, கடல்வாழ் உயிரியன படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
ரம்பலூர் மாவட்டம் குன்னம் அரசு பள்ளிக்கு அருகேயுள்ள சுமார் 50 ஏக்கர் அளவிலான ஏரியில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக ஏரியில் உள்ள வண்டமல் மண் எடுக்கப்பட்டு வருகிறத. ஜேசிபி., இயந்திரத்தின் மூலம் குளத்தின் நடுவே தோண்டிய போது, பல்வேறு அளவுகளில் டைனோசர் முட்டைகளை போன்ற உருவங்களில் ஏராளமாக கிடைக்கப் பெற்றுள்ளது. இவைகள் டைனோசர் முட்டைகளின் படிமங்கள் என்றும், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நத்தை, கடல் சங்கு , கடல் ஆமை, கல்மரத்துண்டுகள், நட்சத்திர மீன் போன்ற கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதையடுத்து, வருவாய் துறையினர் மற்றும் தொல்லியியல் துறை ஆய்வாளர்கள் குன்னம் கிராமத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து கூறிய தொல்லியல்துறை ஆய்வாளர்கள், இந்த டைனோசர் முட்டைகள், சுமார் 12 முதல் 14 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்று கூறியதுடன், இவைகள் அசைவம் சாப்பிடும் கார்னோட்டாரஸ் மற்றும் இலை, தழைகள் உண்ணும் சைவ சௌரபோட் டைனோசரின் முட்டைகள் என்றும் தெரிவித்ததுடன், டைனோர்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.
டைனோசரில் சௌரபோட்ஸ் என்ற வகை சைவம் சாப்பிடும் மிருகம் என்றும், அது நீண்ட கழுத்தைக் கொண்டு, அதிக உயரமாக வளரக் கூடியது, கார்னோட்டாரஸ் வகையானது கறுப்பாகவும், அசைவம் சாப்பிடும் வகையைச் சேர்ந்தது. இது சுமார் ஒன்றரை டன் வரை எடையும், சுமார் 30 அடி நீளமும் கொண்டது. பெரிய கால் தசைகள் கொண்ட, வேட்டையாடும் திறமையும் கொண்டது என்று ஆய்வுகள் தெரிவிப்பதாகவும் கூறினர்.
ஏற்கனவே கார்னோட்டாரஸ் டைனோசர்கள் தென் அமெரிக்கக் கண்டத்தில் சுற்றித் திரிந்த தடயங்கள் கிடைத்துள்ளன. தற்போது இங்கு கிடைத்துள்ள முட்டைகளின் படிமங்களும் அதுபோன்ற வகையை சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே பெரம்பலூர் மாவட்டம் சாத்தனூரில், எம்.எஸ்.கிருஷ்ணன் என்ற புவியியல் ஆய்வாளர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்மரம் ஒன்றினை கண்டறிந்து பதிவு செய்தார். அதன் பின்னர் பல்வேறு கல் மரத்துண்டுகள் இந்த பகுதியில் உள்ள சுற்று வட்டார கிராமங்களில் கண்டறியப்பட்டுள்ளது. இவைகள் அனைத்தும் கிரிடேசியஸ் காலத்து மரமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது டைனோசர் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன்காரணமாக, இந்த பகுதியை தொல்லியல் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றும் சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்