சென்னை:

11 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவு முன்னுக்கு பின் முரணாக உள்ளது என்றும், தமிழகத்தில் சபாநாயகர் விவகாரத்தில் உயர்நீதி மன்றம் தலையிட மறுக்கிறது. ஆனால், புதுச்சேரி சபாநாயகர் விவகாரத்தில் தலையிடுகிறது என்று  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறி உள்ளார்.

இன்று காலை சென்னை விமான நிலையம் வந்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது,

ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பு முன்னுக்கு பின் முரணாக உள்ளது என்றும், ஒரே மாதிரியான பிரச்சனைக்கு 2 விதமான தீர்ப்புகளை சென்னை உயர்நீதி மன்றம் வழங்கியுள்ளது  குற்றம் சாட்டினார்.

மேலும்,  புதுச்சேரி மாநிலத்தில் சபாநாயகர் உத்தரவில் நீதிமன்றம் தலையிடுகிறது, ஆனால் தமிழகத்தில் சபாநாயகர் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறுகிறது… என்றும், காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழகம் மற்றும் புதுச்சேரியை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

புதுச்சேரி நியமன பாஜக எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கில், சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்து, அவர்களின் நியமனம் செல்லும் என்று சென்னை உயர்நீதி மன்றம் கடந்த மாதம் 22ந்தேதி தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.