டோக்யோ: டிவிட்டரில் தனது பதிவை ரீ-ட்வீட் செய்தவர்களில் 1000 நபர்களைத் தேர்வுசெய்து, அவர்களுக்கு மொத்தமாக ரூ.65.3 கோடியைப் பரிசாக அறிவித்துள்ளார் ஜப்பான் கோடீஸ்வரர் ஒருவர்.
இதன்மூலம், அவரின் பதிவை ரீ-ட்வீட் செய்தவர்கள் குறைந்தபட்சம் லட்சாதிபதிகள் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது, ஒருவருக்கு குறைந்தபட்சம் ரூ.6.5 லட்சத்தை பரிசாக அறிவித்துள்ளார்.
அந்த வித்தியாசமான கோடீஸ்வரரின் பெயர் யுஸகு மேஸவா. இவர், ZOZO என்ற நிறுவனத்தின் தலைவர். இவர் திடீர்திடீரென சமூகம் குறித்த ஆய்வுகளில் ஈடுபடுவார். இவர் நிலாவிற்கு செல்ல முன்பதிவும் செய்துள்ளார்.
இந்நிலையில், ஜனவரி 5ம் தேதி டிவிட்டரில் தான் இடும் பதிவை ரீ-ட்வீட் செய்யும் நபர்களுக்கு மொத்தமாக ரூ.65.3 கோடி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
உடனே, 41.41 லட்சம் ரீ-ட்வீட் மற்றும் 14.04 லட்சம் லைக்குகள் குவிந்தன. தற்போது அந்த பிரமாண்ட எண்ணிக்கையிலிருந்து 1000 நபர்களை தேர்வுசெய்து, அவர்களுக்கு லட்சங்களை அள்ளி வழங்கவுள்ளார் யுஸகு மேஸவா.