144 – ஊரடங்கு – லாக் டவுன் : வித்தியாசம் என்ன?

Must read

ஆரம்பம் முதலே கத்திக்கொண்டு இருக்கிறோம், அரசுகளே, ஊரடங்கையும் 144 ஐயும் போட்டு குழப்பாதீங்க.. எந்த தெளிவும் கிடைக்காதுன்னு..

லாக் டவுன், ஊரடங்கு, 144 மூன்றுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு.. நமக்கு தெரிஞ்சதை சொல்றோம்

லாக் டவுன்… கூட்டம் சேரக்கூடாது அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கும்.. மக்கள் நடமாட பாஸ் தேவையில்லை, வேறு வழியே இல்லை எனும்போது மட்டுமே அத்துமீறும் ஒருத்தர் மேல் சட்ட நடவடிக்கையை எடுக்கலாம்

ஊரடங்கு… மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாது. அத்தியாவசிய பொருட்களைக்கூட வாங்க அனுமதி கிடையாது. கொஞ்ச நேரம் ஊரடங்கைத் தளர்த்தினால் மட்டுமே பொருட்களை வாங்க வெளியே வரமுடியும். வெளியே நடமாட பாஸ் வாங்குவது என்பதெல்லாம் அவ்வளவு சுலபத்தில் நடக்காத காரியம்..

144 உத்தரவு.. மக்கள் வெளியே நடமாடலாம், ஆனால் நான்கு பேருக்கு மேல் ஒன்றாக இருக்கக் கூடாது.. பேரணி கூட்டமெல்லாம் நடத்தமுடியாது.

இந்த மூணு ஐயிட்டங்களையும் தனித்தனியா காட்டியிருந்தா ஜனங்களுக்கு புரிஞ்சிருக்கும். ஆனா நம்ம அரசாங்கங்கள் என்ன பண்ணிச்சு?. முதல் நாள்ல இருந்தே இந்த மூணுத்தையும் மிக்சியில ஒன்னா போட்டு அடிஅடின்னு அடிச்சி குடுக்க ஆரம்பிச்சாங்க..

புது மிக்சுடு ஐயிட்டம்ன்றதால ஜனங்களுக்கும் ஒன்னும் புரியலை.. அசரவே அசராத ஜனங்களைப் பார்த்து கவர்மெண்டுகளுக்கும் ஒன்னும் புரியலை..

பழைய டைட்டில்தான்.. ஜனநாயக பூமி..ஜமாய்ங்கடா சாமி.

– நெட்டிசன் ஏழுமலை வெங்கடேசன்

More articles

Latest article