நெட்டிசன்:
Saravanan Savadamuthu முகநூல் பதிவு
கட்டுக்கோப்புக்கு பெயர் பெற்ற பிரிட்டிஷ் ராஜ குடும்பத்தில் அபாரமான விரிசல். சார்லஸின் மருமகள்கள் இருவருக்கும் ஒத்துவரவில்லை. ஓரகத்திகளின் சண்டையை இளைய மருமகள் ஆத்துக்கு வந்த கொஞ்ச நாளிலேயே பிரிட்டிஷ் பத்திரிகைகள் எழுதிக் குவித்தன. இன்றைக்கு அது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.
இனிமேல் பாதி நாட்கள் லண்டனிலும், மீதி நாட்கள் கனடாவிலும் நாங்கள் கழிக்க இருக்கிறோம் என்று சார்லஸின் இளைய மகன் ஹாரியும், அவரது மனைவி மேகனும் அறிவிக்க.. ஆடிப் போயிருக்கிறது பக்கிங்ஹாம் அரண்மனை வட்டாரம்.
மேஹன் தன் கைக்குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஏற்கெனவே கனடாவுக்கு பறந்துவிட்டார். பின்னாடியே போயிருக்க வேண்டிய ஹாரியை அமர்த்தி பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது அரச குடும்பம்.
மருமகள்களுக்குள் ஒத்துப் போகவில்லையென்றால் எவ்வளவு பெரிய குடும்பமாக இருந்தாலும் டமால், டுமீல்தான்..!