டில்லி

ரியண்டல் வங்கியில் ஒரு  நகைக்கடை  நிறுவனம் ரூ. 390 கோடி மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டில்லி துவாரகா தாஸ் சேத் இண்டர்நேஷனல் என்னும் நிறுவனம் வைரம் மற்றும் உயர்ந்த வகை நகைகள் தயாரித்து விற்கும் தொழிலை செய்து வந்துள்ளது.   இந்த நிறுவனத்தை சுப்யா சேத் மற்றும் ரீடா சேத் ஆகிய இருவரும் நடத்தி வந்துள்ளனர்.     இந்த நிறுவனத்துக்கு கடன் உறுதி அளிப்புக் கடிதம் ஒரியண்டல் வங்கியில் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்துள்ளது.

ஆனால் இந்த நிறுவனம் செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாமல் உள்ளது.   இது குறித்து வங்கி நிர்வாகம் கடந்த ஆகஸ்ட் மாதம் சிபிஐக்கு புகார் அளித்துள்ளது.   அந்தப் புகாரின் படி ரூ.390 கோடி வரை இந்த நிறுவனம் வங்கிக்கு பாக்கி வைத்துள்ளது தெரிய வந்துள்ளது.   இந்த புகாரை ஒட்டி கடந்த வியாழன் அன்று சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணைஅயி தொடங்கியது.

அப்போது இந்த நிறுவனத்துக்கு தொடர்புடைய அனைவரும் வெளிநாட்டுக்கு ஏற்கனவே தப்பி ஓடி விட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.    இது வங்கிகளிடையே கடும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.     தப்பி ஓடியவர்கள் எந்த நாட்டுக்கு சென்றுள்ளனர் என்பதும் தற்போது அவர்கள் எங்குள்ளனர் என்பதும் இதுவரை தெரியவில்லை.