தோனியின் உலக சாதனை : 100 ஸ்டம்பிங் செய்த முதல் வீரர்

Must read

 

கிரிக்கெட் விளையாட்டில் ஸ்டம்பிங் என்பது பந்தை விக்கெட் கீப்பர்  விக்கெட் மீது எறிந்து   அவுட் ஆக்குவது ஆகும்.   இதுவரை 100 முறை அது போல செய்து இந்தியாவின் மகேந்திரசிங் தோனி புதிய உலக சாதனை நேற்று செய்துள்ளார்.  இதற்கு முன் 99 முறை ஸ்டம்பிங் செய்து விக்கெட்டை வீழ்த்திய ஸ்ரீலங்காவின் வீரரான சங்ககராவின் சாதனையை தோனி முறியடித்துள்ளார்.

நேற்று ஸ்ரீலங்காவின் கொழும்பு நகரில் நடந்த ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் தோனி இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார்.  ஏற்கனவே தோனி கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி தனது 300வது மேட்சை விளையாடி உள்ளார்.  அதன் மூலம் 50 ஓவர் போட்டிகளில் 300 மேட்ச் விளையாடிய ஆறாவது இந்திய வீரர் என்னும் சாதனையை அடைந்தார்.

தோனியின் சாதனையை அவருடைய ரசிகர்கள் பாராட்டி வாழ்த்துச் செய்திகள் இணையத்தில் பதிந்து வருகின்றனர்.

More articles

Latest article