இந்திய கிரிக்கெட்டின் சகாப்தம் ‘தோனி’…

Must read

இந்திய கிரிக்கெட் வரலாற்றில், மகேந்திரசிங் தோனி தலைமையிலான கிரிக்கெட் ஆட்டம் தனி சகாப்தமாகவே கருதப்படுகிறது.

தனது பதினெட்டாவது வயதில் 1999-2000 ஆண்டு நடைபெற்ற ரஞ்சி டிராபியில் முதன்முதலாக பிஹார் அணிக்காக களமிறங்கினார் தோனி. அஸ்ஸாம் கிரிக்கெட் அணிக்கு எதிராக இரண்டாவது இன்னிங்ஸில் அவர் முதலாவதாக களமிறங்கிய ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 68 ரன்கள் எடுத்து அரை சதமடித்தார் ஐந்து ஆட்டங்களில் 283 ரன்கள் எடுத்திருந்தார்.

தொடர்ந்து,  2002/03 ஆண்டுகளில், டோனியின் செயல்திறன் ரஞ்சி டிராபியில் மூன்று அரை சதங்கள், தியோதர் டிராபி போட்டியில் இரண்டு அரைசதங்கள் விளாசியுருந்த நிலையில், தனது பேட்டிங் திறமைமூலம், ரசிகர்கள் மட்டுமின்றி பல்வேறு கிரிக்கெட் ஜாம்பவான்களின் பார்வையில் விழுந்தார். யார் இந்த தோனி? என்று பேசவும் யோசிக்கவும் வைத்தார். இதுவே அவரது அங்கீரத்திற்கு கிடைத்த முதல் பரிசு.

பின்னர் நடைபெற்ற  துலீப் டிராபி இறுதி ஆட்டங்களில், கலந்துகொண்ட தோனி,  இரண்டாவது இன்னிங்ஸில் தோல்வியடையும் நிலையிலும், அபாரமாக அடி சதமடித்து சாதனை படைத்தார். இதுவே தோனி இந்திய அணிக்குள் புக காரணமாக அமைந்தது.

முதலில்  இந்திய ஏ அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.  2003/04 ஆண்டுகளின்போது நடைபெற்ற ஏ அணிகளுக்கான ஆட்டத்தின்போது, தனது திறமையின் காரணமாக,  சர்வதேச ஆட்ட முறைக்கான அங்கீகாரத்தைப் பெற்றார்

ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடந்த ஜிம்பாப்வே XIக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் டோனி 7 கேட்சுகள் மற்றும்  4 ஸ்டம்பிங்குகளை செய்து, தனது விக்கெட் கீப்பிங் முயற்சியை வெளிப்படுத்தி னார்.  ஏற்கனவே இந்திய அணிக்கு சரியான விக்கெட் கீப்பர் இல்லாத நிலையில், தோனியின் கீப்பிங் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகிகளை யோசிக் வைத்தது.

தொடர்ந்து,  பாகிஸ்தான் ஏ அணிக்கு எதிரான  ஆட்டத்தின்போது, தனது திறமையை வெளிப்படுத்தி சதமடித்து, இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணையானார். இதில், அவரது பேட்டிங் திறமை உலகறிய செய்தது.  அதே அணிக்கு எதிராக 120[36] மற்றும் ஆட்டமிழக்காமல் 119[37]. டோனி ஏழு ஆட்டங்களில் 362 ரன்கள் எடுத்தார் (6 இன்னிங்ஸ், சராசரி:72.40)

இந்த போட்டித்தொடரில் அவருடைய இந்த செயல்திறன் அப்போது அணித்தலைவராக இருந்த சௌரவ் கங்குலி மட்டுமின்றி இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளின்  கவனத்தை ஈர்த்தது.

கடந்த 2000ஆம் ஆண்டுகளில் இந்திய அணியில் விக்கெட் கீப்பரின் இடத்திற்கு சரியான வீரர் இல்லாத நிலையில், ராகுல் டிராவிட் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்தார். பேட்டிங்கில் திறமை மிகுந்த வீரரான டிராவிட்டுக்கு மாற்று வீரராக யாரை தேர்வு செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த நிலையில்,  இந்திய  ஏ அணியில் டோனி ஆடிய அசாத்திய ஆட்டம், சாதனை கணக்கில் கொண்டு இந்திய கிரிக்கெட் அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

கடந்த  2004/05 ஆண்டு பங்களாதேஷ் சுற்றுப்பயணத்திற்கான சர்வதேச ஒருநாள் போட்டி அணியில் டோனி சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

டோனி தனது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் சிறந்த துவக்கத்தை அளிக்கவில்லை, முதல் ஆட்டத்திலேயே அவர் ரன் எதுவும் எடுக்காமல் ரன் அவுட் ஆனார். இருந்தாலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்பட்டது.  அதை சரியான வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்ட தோனி, தனது முழுத் திறமையை வெளிப்படுத்தி, இந்திய கிரிக்கெட்அணியின் கேப்டனாக பதவி பெற்று பல்வேறு சாதனைகளை பெற்று இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தனது பெயரை பொன்னெழுத் துக்களால் பதிவு செய்தார்.

முதல் ஆட்டத்தில் ரன்அவுட் ஆகி, இந்திய கிரிக்கெட்டில் தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கிய தோனி, கடந்த ஆண்டு (2019) ஜூலை மாதம் 9ந்தேதி அன்று நடைபெற்ற உலக கோப்பை தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 50 ரன்களை குவித்திருந்த தோனி ரன்அவுட்டது சோகமான விஷயம். 

இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றும் என இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த வேளையில் தோனியின் ரன்அவுட், கோப்பையை பெறும் வாய்ப்பை இழக்கச் செய்தது. இதுவே அவரது கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளிக்கு அச்சாரமானது. ரன் அவுட்டில் தொடங்கிய அவரது கிரிக்கெட் வாழ்க்கை ரன் அவுட்டிலேயே முடிவடைந்ததுள்ளது.

தோனியின் சாதனைகள்  அவர் பெற்ற விருதுகள்

கடந்த 2007ம் ஆண்டு  டி20 உலக கோப்பை

2013ல் சாம்பியன்ஸ் டிராபி,

2011ல் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை

என மூன்று சர்வதேச கோப்பைகளையும் வென்றுகொடுத்து சாதனை படைத்தார்.

3 முறை ஐபிஎல் கோப்பையையும் வென்றுள்ளார்.

இதுமட்டுமின்றி  4 தொடர் நாயகன் விருதுகள்,  12 ஆட்ட நாயகன் விருதுகளையும் குவித்துள்ளார்.

தொடர் நாயகன் விருதுகள்

கடந்த 2005, 06ம் ஆண்டுகளில் ஸ்ரீலங்கம் இந்தியா இடையே நடைபெற்ற சர்வதேச ஒருநாள் போட்டித்தொடரில் 346 ரன்கள் (7 ஆட்டங்கள் & ஐந்து இன்னிங்ஸ், 1×100, 1×50); ஆறு கேட்சுகள் & மூன்று ஸ்டம்பிங்கள் எடுத்துசாதனை படைத்தார்.

2007ம் ஆண்டில் இந்தியா பங்களாதேஷ் இடையேயான ஒருநாள் போட்டித் தொடரில் 127 ரன்கள் (2 ஆட்டங்கள் 2இன்னிங்ஸ், 1×50); ஒரு கேட்ச் & இரண்டு ஸ்டம்பிங்குகள் எடுத்து அதகளம் செய்திருந்தார்.

2008ம் ஆண்டு இந்தியா ஸ்ரீலங்கா ஒருநாள் சர்வதேச போட்டித்தொடரில் 193 ரன்கள் (5 ஆட்டங்கள் & ஐந்து இன்னிங்ஸ், 2×50); மூன்று கேட்சுகள் & ஒரு ஸ்டம்பிங் மற்றும் மூன்று கேட்சுகள் & ஒரு ஸ்டம்பிங் எடுத்து அதிரடிசாதனை நிகழ்த்தி உள்ளார்.

2009ம் ஆண்டு இந்தியா மேற்கிந்தியத் தீவுகள் ஒருநாள் சர்வதேச போட்டித்தொடரில் 182 ரன்கள் (4 ஆட்டங்கள் & மூன்று இன்னிங்ஸ்களில் சராசரி 91உடன்); நான்கு கேட்சுகள் & ஒரு ஸ்டம்பிங் எடுத்து சாதனை புரிந்துள்ளார்.

ஆட்ட நாயகன் விருதுகள் :

2004/05 ம் ஆண்டுகளில் பாகிஸ்தான்அணியுடன் விசாகப்பட்டிணத்தில் நடைபெற்ற போட்டியில் 148  ரன்னுக்கு (123ப, 15×4, 4×6) இரண்டு கேட்சுகள் பிடித்து முதன்முதலாக ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

2005/06ம் ஆண்டில் ஸ்ரீலங்காவுக்கு எதிராக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த ஆட்டத்தில் 183 ரன்னுக்கு (145ப, 15×4, 10×6); ஒரு கேட்ச் பிடித்து ஆட்ட நாயகனானார்.

இதே ஆண்டில் பாகிஸ்தான் லாகூரில் நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில், 72 ரன்னுக்குள் (46ப, 12×4); மூன்று கேட்சுகள் பிடித்து ஆட்ட நாயகனானார்.

2007ம் ஆண்டில் வங்கதேசத்துக்கு எதிராக மீர்பூரில் நடைபெற்ற போட்டியில், 91 ரன்னுக்கு 106ப, 7×4); ஒரு ஸ்டம்பிங் எடுத்து ஆட்ட நாயகன் விருதை கைப்பற்றினார்.

2007ம் ஆண்டு, சென்னையில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் 139 ரன்னில் (97ப, 15×4, 5×6); மூன்று ஸ்டம்பிங்குகள் எடுத்து ஆட்ட நாயகனானார்.

இதேஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சண்டிகரில் நடைபெற்ற போட்டியில் 50 ரன்னுக்கு 50* ( 35 ப, 5×4 1×6); இரண்டு ஸ்டம்பிங்குகள் எடுத்து சாதனை நாயகன் பட்டத்தை பெற்றார்.

இதே ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக கவுகாத்தியில் நடைபெற்ற போட்டியின்போதும் 63ரன்னுக்கு ஒரு ஸ்டம்பிக் எடுத்து ஆட்ட நாயகன் விருதுக்கு சொந்தக்காரனானார்.

2008ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக கராச்சியில் நடைபெற்ற ஆட்டத்தின்போது, 67 ரன்னுக்கு 2 கேட்சுகள் பிடித்து ஆட்ட நாயகனானார்.

இதேஆண்டில் கொழும்பு (ஆர்பிஎஸ்) மைதானத்தில் நடைபெற்ற இலங்கை அணிக்குஎதிரான போட்டியில் 76 ரன்னுக்கு இரண்டு கேட்சுகள் பிடித்து ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

2009ம் ஆண்டு நியூசிலாந்து நேப்பியர் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது, 84 ரன்னுக்கு ஒரு கேட்ச் & ஒரு ஸ்டம்பிங் எடுத்து ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

இதேஆண்டில்  பூஸஜூர் ஸ்டேடியம், செயிண்ட் லூசியாவில் நடைபெற்ற மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் 46 ரன்களுக்கு, இரண்டு கேட்சுகள் & ஒரு ஸ்டம்பிங் எடுத்து ஆட்ட நாயகன் விருதை அள்ளினார்.

இதேஆண்டில் விதர்பா கிரிக்கெட் அசோஸியேஷன் ஸ்டேடியம், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற அந்நாட்டு அணிக்கு எதிரானஆட்டத்தில் 124 ரன்னுக்கு ஒரு கேட்சுகள், ஒரு ஸ்டம்பிங் & ஒரு ரன்அவுட் எடுத்த ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

ஒருநாள் சர்வதேச போட்டிகளில் தோனியின்  சாதனைகள்

2005ஆம் ஆண்டு அக்டோபர் 31இல் ஜெய்ப்பூர் சுவாமி மான்சிங் ஸ்டேடியத்தில் ஸ்ரீலங்காவிற்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் டோனி 145 பந்துகளுக்கு ஆட்டமிழக்காமல் 183 ரன்கள் அடித்தார்.

தோனி ஆட்டமிழக்காமல் 183 ரன்கள் எடுத்ததே ஒருநாள் சர்வதேச போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாகும் (முந்தைய சாதனை: லாரா எடுத்த 153 ரன்கள்).

இந்த இன்னிங்ஸ்சில் 10 சிக்ஸர்கள் அடித்திருந்தார். இதுவரை  எந்தவொரு இந்திய வீரரும் இந்த சாதனையை நிகழ்த்தவில்லை.  (சர்வதேச போட்டியில் அதிகபட்சம் சாதனைகளாக 11 சிக்சர்கள் அடித்துள்ளவர்கள், இலங்கை வீரர் சனத் ஜெயசூர்யாவும், பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அஃப்ரிடி மட்டும்தான்.)

ஒரு விக்கெட் கீப்பரான தோனி அடித்த அதிகபட்ச ரன்கள்,  ஆடம் கில்கிறிஸ்டின் 172 ரன்கள் சாதனையை முறியடித்தது.

இந்த இன்னிங்ஸ் சையத் அன்வரின் சாதனையை முறியடித்து பவுண்டரிகளில் (120 – 15×4; 10×6) எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் என்ற சாதனையை படைத்தது. இந்த சாதனை ஹெர்ஷல் கிப்ஸால் (பவுண்டரிகளில் 126 ரன்கள் – 21×4; 7×6) ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அவர் அடித்த 175 ரன்களில் முறியடிக்கப்பட்டது.

1999ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பையின்போது ஸ்ரீலங்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் கங்குலி படைத்த சாதனையை தோனி  ஆட்டமிழக்காமல் அடித்த 183 ரன்கள் சமன் செய்தது.

50 ஆட்டங்களுக்கும் மேல் விளையாடிய இந்திய பேட்ஸ்மேன்களில், டோனி மட்டுமே அதிகபட்ச சராசரி விகிதத்தைக் கொண்டிருக்கிறார் [69].  டோனியின் மட்டைவீச்சு சராசரி ஒருநாள் சர்வதேச போட்டி விக்கெட்கீ ப்பர்களிடைய அதிகபட்சமாகும்.

2007ஆம் ஆண்டு ஜூனில், டோனியும் (139*) மகிலா ஜெயவர்தனேவும் (107)[68] ஆஃப்ரோ-ஆசியா கோப்பையின்போகு ஆஃப்ரிக்கா XI அணிக்கு எதிராக 218 ரன்கள் எடுத்து ஆறாவது விக்கெட் கூட்டில் புதிய உலக சாதனையைப் படைத்தனர்.[70]

தோனி ஆட்டமிழக்காமல் ஒருநாள் சர்வதேச போட்டியின்போது அடித்த 139 ரன்கள் ஏழாவதாக களமிறங்கிய மட்டையாளரால் அதிகபட்ச தனிநபர் இன்னிங்ஸின் அதிகபட்ச ரன்கள் சாதனையான ஷான் பொல்லக்கி்ன் சாதனையை டோனி முறியடித்தார்.[71]

எதிர்பாராதவிதமாக, பொல்லக்கின் சாதனை அவரது ரன்கள் 2007ஆம் ஆண்டு ஆஃப்ரோ-ஆசியா கோப்பையின் முதல் ஆட்டத்திலேயே செய்யப்பட்டிருக்க டோனியின் சதம் அந்தத் தொடரின் மூன்றாவது மற்றும் இறுதி ஆட்டத்தில் செய்யப்பட்டது.

ஒரு இந்திய விக்கெட் கீப்பரால் ஒரு இன்னிங்ஸில் செய்யப்பட்ட அதிகபட்ச ஆட்டமிழக்கச் செய்தல் சாதனையையும் டோனி வைத்திருக்கிறார் என்பதுடன் கூட்டு சர்வதேச போட்டியில் (ஆடம் கில்கிறிஸ்ட் உடன்) 2007ஆம் ஆண்டு செப்டம்பர் 2இல் இங்கிலாந்திற்கு எதிராக ஹெட்லிங்லேயில் நடந்த ஆட்டத்தில் ஆறு ஆட்டமிழக்கச் செய்தல்களை செய்தார்.

டோனி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ஆட்டமிழக்கச் செய்தலுக்கான இந்திய சாதனையையும் செய்திருக்கிறார். அவர் ராஜ்கட், மாதவராவ் சிந்தியா கிரிக்கெட் கிரவுண்டில் நடந்த ஆட்டத்தில் சாகிர்கான் இயன்பெல்லுக்கு வீசிய பந்தை பிடித்தபோது 2008ஆம் ஆண்டு நவம்பர் 14ந்தேதி  இந்தியாவிற்கான நயன் மோங்கியாவின் 154 என்ற சாதனைக்கு அருகாமையில் வந்தார்.

ஆஃப்ரிக்கா XI அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் சர்வதேச போட்டிகளை உள்ளிட்டிருப்பினும், அவரது 155வது ஆட்டமிழக்கச் செய்தல் 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ல் கொழும்பு, ஆர்.பிரேமதாசா ஸ்டேடியத்தில் முனாஃப் படேல் டிஎம் டில்ஷனுக்கு வீசிய பந்தை பிடித்ததாகும்.

அன்றைய தினம் கொழும்பு ஆர்.பிரேமதாசா ஸ்டேடியத்தில் ஸ்ரீலங்காவிற்கு எதிராக தனது 23வது இன்னிங்ஸில் டோனி நான்கு ரன்கள் அடித்திருந்த நிலையில் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 4,000 ரன்களை நிறைவுசெய்தார்.

ஏற்கனவே 165  விக்கெட்டுகளை கைப்பற்றிய தோனி (120 கேட்சுகள் + 40 ஸ்டம்பிங்குகள்) ஒருநாள் சர்வதேச போட்டியில் 4,000 ரன்கள் மற்றும் 100 ஆட்டமிழப்புகளைச் செய்த இரட்டைச் சாதனை வரிசையில் ஆடம் கில்கிறிஸ்ட், ஆன்டி ஃபிளவர், அலெர் ஸ்டூவர்ட், மார்க் போச்சர் மற்றும் குமார் சங்ககாராவிற்கு அடுத்தபடியாக ஆறாவது இடத்தில் இருக்கிறார்.

இந்த சாதனைகளை தனது 27 வயதுக்குள் தோனி நிகழ்த்தியது குறிப்பிடத்தக்து. (அதாவது அவர் இந்திய அணியில் சேர்ந்து 208 நாட்களில் இந்த சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது)

தோனி தலைமையில் இந்தியஅணி  உலகக்கோப்பையில் ஆடிய ஆட்டங்களில் 12க்கு 11ல் வெற்றி யினை தேடித்தந்துள்ளார்.  இதன் மூலம் இவர் கபில்தேவ் சாதனையினை முறியடித்துள்ளார்.

2019ஆம் ஆண்டு உலக கோப்பையை வெல்வோம் என எதிர்பார்த்த நிலையில், இறுதிப்போட்டியில் தோனியின் ஆட்டம் எடுபடாத காரணத்தால், தோல்வியை சந்திக்க நேர்ந்தது. இதனால் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார்.

டெஸ்ட் போட்டிகளில் தோனியின் சாதனைகள்

தோனி இதுவரை 37 ஆட்டங்களில் ஆடி 1962 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி ரன் ரேட்  37.73 ஆக இருந்துள்ளது. அதிகபட்சமாக 148 ரன்கள் எடுத்துள்ளவர், 1 சதம், 16 அரை சதங்களுடன் 92 கேட்சுகளையும்,  18 ஸ்டம்பிங்குகளையும் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 8 டெஸ்ட் தொடர்களில் ஆடியுள்ள தோனி 448 ரன்களை குவித்துள்ளார். அவரது சராசரி ரன் ரேட் 34.46. அதிகபட்சமாக 92 ரன்கள் எடுத்திருப்பதும் 4 அரை சதங்களையும் 18 கேட்சுகளையும், 6 ஸ்டம்பிங்களை எடுத்துள்ளார்.

வங்கதேசம் அணிக்கு எதிராக 2 டெஸ்ட் தொடர்களில் ஆடியுள்ள தோனி 104 ரன்களை குவித்துள் ளார். அவரது சராசரி ரன் ரேட் 104.0 அதிகபட்சமாக 51 ரன்கள் எடுத்திருப்பதும் ஒரு அரை சதத்துடன்  6கேட்சுகளையும், 1 ஸ்டம்பிங்களை எடுத்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிராக 8 டெஸ்ட் தொடர்களில் ஆடியுள்ள தோனி 397 ரன்களை குவித்துள்ளார். அவரது சராசரி ரன் ரேட் 33.08. அதிகபட்சமாக 92 ரன்கள் எடுத்திருப்பதும் 4 அரை சதங்களையும் 24 கேட்சுகளையும், 3 ஸ்டம்பிங்களை எடுத்து சாதனை படைத்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிராக 2 டெஸ்ட் தொடர்களில் ஆடியுள்ள தோனி 155 ரன்களை எடுத்துள்ளார். அவரது சராசரி ரன் ரேட் 77.50 அதிகபட்சமாக 56 ரன்கள் எடுத்திருப்பதும் 2 அரை சதங்களையும் 11 கேட்சுகளையும், 1 ஸ்டம்பிங்கும் எடுத்துள்ளார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக 5 டெஸ்ட் தொடர்களில் ஆடியுள்ள தோனி 323 ரன்களை எடுத்துள்ளார். அவரது சராசரி ரன் ரேட் 64.60 அதிகபட்சமாக 148 ரன்கள் எடுத்துள்ள தோனி, ஒரு சதம் மற்றும்  2 அரை சதங்களையும் 9 கேட்சுகளையும், 1 ஸ்டம்பிங்கும் எடுத்து சாதனை நிகழ்தியுள்ளார்.

பாகிஸ்தான் பைசாபாத் நகரில் உள்ள இக்பால் ஸ்டேடியத்தில் கடந்த 2006ம் ஆண்டு நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியின்போது, தோனி தனது அசாத்திய ஆட்டத்தில் 148 ரன்கள் எடுத்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 5 டெஸ்ட் தொடரில் ஆடியுள்ள தோனி, இதுவரை 218 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி ரன் ரேட் 27.25. அதிகபட்சமாக 52 ரன்களை எடுத்துள்ளவர் 1 அரை சதத்தையும் 6 கேட்சுகள் மற்றும் 1 ஸ்டம்பிங்கும் எடுத்துள்ளார்.

இலங்கை அணிக்கு எதிராக 3 டெஸ்ட் தொடர்களில் ஆடியுள்ள தோனி 149 ரன்களை குவித்துள்ளார். அவரது சராசரி ரன் ரேட் 37.25 அதிகபட்சமாக 51 ரன்கள் எடுத்திருப்பதுடன் 1 அரை சதமும், 5 கேட்சுகளையும், 1 ஸ்டம்பிங்கும் எடுத்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 4 டெஸ்ட் தொடர்களில் ஆடியுள்ள தோனி 168 ரன்களை குவித்துள்ளார். அவரது சராசரி ரன் ரேட் 24. அதிகபட்சமாக 69 ரன்கள் எடுத்திருப்பதுடன் 1 அரை சதமும், 13 கேட்சுகளையும், 4 ஸ்டம்பிங்கும் எடுத்துள்ளார்.

தோனியின் தலைமையில் நடைபெற்ற டெஸ்ட் ஆட்டத்தின் சாதனைகள்

ஃபைஸலாபாத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக டோனி அடித்த முதல் சதம் (148) இந்திய விக்கெட் கீப்பர் அடித்ததிலேயே வேகமானதாகும். டோனியின் 93 பந்துகள் சதத்தைவிட இரண்டு ஆட்டக்காரர்களின் (கம்ரான் அகமல் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் – 2) மூன்று சதங்களே வேகமானவை.[74]

டோனியின் அணித்தலைமையின்கீழ் இந்தியா ஆஸ்திரேலியாவை 2008ஆம் ஆண்டு அக்டோபர் 21இல் 320 ரன்கள் எடுத்து வீழ்த்தியது, இந்தியாவின் ரன்கள் வகையில் இது மிகப்பெரியதாகும்.[75]

ஒரு இன்னிங்ஸில் அதிக கேட்சுகளைப் பிடித்த ஆட்டக்காரர் என்ற சாதனையையும் வைத்தி ருக்கிறார். 2009ஆம் ஆண்டு ஏப்ரலில் வெலிங்டனில் நியூஸிலாந்திற்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் ஆறு கேட்சுகளைப் பிடித்து அவர் இந்த சாதனையைப் படைத்தார்.

ஒரு இந்திய விக்கெட் கீப்பர் ஒரு இன்னிங்ஸில் செய்ய அதிகபட்ச ஆட்டமிழக்கச் செய்தல் என்ற சையத் கிர்மானியின் சாதனையையும் சமன் செய்திருக்கிறார். 1976இல் நியூஸிலாந்திற்கு எதிரான ஆட்டத்தில் சையத் கிர்மானி ஆறு பேரை ஆட்டமிழக்கச் செய்தார் (5 கேட்சுகள் மற்றும் ஒரு ஸ்டம்பிங்). டோனி அந்த சாதனையை 2009ஆம் ஆண்டில் நடந்த போட்டியில் ஆறு பேரை (6 கேட்சுகள்) ஆட்டமிழக்கச் செய்து அந்த சாதனையை சமன் செய்திருக்கிறார்.

இந்திய விக்கெட் கீப்பர்களால் செய்யப்பட்ட ஆட்டமிழக்கச் செய்தல்கள் பட்டியலில் டோனி தற்போது மூன்றாம் இடத்தில் இருக்கிறார். 2009ஆம் ஆண்டு ஏப்ரலில் நடந்த நியூஸிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் பெற்ற ஆறு ஆட்டமிழக்கச் செய்தல் களுடன் டோனி இப்போது 109 ஆட்டமிழக்கச் செய்தல் எண்ணிக்கையைப் பெற்றிருக்கிறார்.

ஒரு டெஸ்ட் போட்டியின் ஒவ்வொரு இன்னிங்ஸிலும் அரைசதங்கள் அடித்ததற்கும் அப்பால் ஒரு இன்னிங்ஸில் அதிகபட்ச ஆட்டமிழக்கச் செய்தல்களை செய்த இரண்டாவது விக்கெட் கீப்பராகவும் டோனி இருக்கிறார்.

1966-69ல் டெனிஸ்லின்ட்சே இந்த சாதனையை ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவிற்காக முறியடித்தார் & 182 மற்றும் ஆறு கேட்சுகள். + இரண்டு கேட்சுகள்.

இந்திய கிரிக்கெட் அணியில், இதுவரை அனைத்துவிதமான சர்வதேச கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் தோனிதான். டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை முதலிடத்துக்கு வழி நடத்திச் சென்றவர்.

இந்திய கிரிக்கெட்டின் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கி வந்த தோனி,  கடந்த 2014ம் ஆண்டு டெஸ்ட் கேப்டன்சிப் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

தொடர்ந்து,  2017ம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டன்சிப் பதவியில்  இருந்தும் விலகுவதாக அறிவித்தார்.  இந்த நிலையில், ஆகஸ்டு 15ந்தேதி 2020ம் ஆண்டு சர்வசதே போட்டிகளில் இருந்துவிலகுவதாக அறிவித்து உள்ளார்.

தோனியின் கிரிக்கெட் சகாப்தம் இந்திய கிரிக்கெட் வரலாற்றிற்கு மகுடம் சூட்டியுள்ளது.

More articles

Latest article