நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வெற்றிப்பெற்ற நிலையில் மைதானத்தில் தோனி அவரது மகளுடன் ஜூஸ் குடிக்கும் வீடியோ ரசிகர்களிடையே பகிரப்பட்டு வருகிறது.
2018 ஐபிஎல் கோப்பைக்கான இறுதி போட்டிக்கு சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும், சன்ரைசஸ் ஹைதரபாத் அணியும் மோதின. இதில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்யாசத்தில் வெற்றிப்பெற்று மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில் கிரிக்கெட் மைதானத்திற்கு தோனியின் மகள் ஜிவா, ரெய்னாவின் மகள் கிரேசியா, ஹர்பஜன்சிங் மகள் ஹினயா அழைத்து வரப்பட்டன. அவர்களுடன் வீரர்கள் விளையாடிய வீடியோ சமூக வளைதளங்கள் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.
இதோடு மட்டுமில்லாமல் தோனிக்கு அவரது மகள் ஜிவா, தான் குடித்துக் கொண்டிருந்த ப்ரூட்டியை தரும் வீடியோ ஜிவா ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஜிவா தந்த ஜூஸை தோனி வேகமாக வாங்கி குடித்து விட்டு, சூப்பர்கிங்ஸ் வெற்றியை கொண்டாட மைதானத்திற்கு செல்லும் காட்சி ஜிவா ரசிகரால் இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.
ஐபிஎல் வெற்றியை வீரர்கள் மைதானத்தில் கொண்டாடிக் கொண்டிருந்த போது ஜிவா, கிரேசியா மற்றும் ஹினயா மைதானத்தில் விளையாடியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இதுகுறித்து தோனி தனது இன்ஸ்டகிராமில் ‘ சிஎஸ்கே அணி வெற்றிப்பெற துணையாக இருந்த ஜிவா மற்றும் சாக்ஷிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எனவும், 117 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காம்ல் வெற்றிக்கு உதவிய ஷேன் வாட்சனுக்கு வாட்சனுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இறுதியாக, தனது மகள் ஜிவா ஐபிஎல் போட்டியில் கோப்பையை வெல்வதை பற்றி சிறிதும் நினைக்காமல், போட்டி முடிந்த நிலையில் புல்வெளியில் ஓடி விளையாடுவதையே ஆர்வமுடன் எதிர்ப்பார்த்திருந்ததாக தோனி குறிப்பிட்டுள்ளார்.