மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ராஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் கர்ணன். தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகியது . ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரிந்துள்ளார்.

கொரோனா பயத்தை காற்றில் பறக்கவிட்டு அதிகாலையிலேயே படத்தை காண ரசிகர்கள் திரையரங்கில் திரண்டனர். தமிழகத்தின் அனைத்துத் திரையரங்குகளும் ஹவுஸ்ஃபுல்லாயின.

தமிழகம் முழுவதும் நேற்று ஒரேநாளில் 10.39 கோடிகளை இப்படம் வசூலித்திருப்பதாக உள்வட்டார தகவல்கள் கூறுகின்றன. தனுஷ் படம் ஒன்று முதல் நாளில் 10 கோடியை கடப்பது இதுவே முதல்முறை. அந்தவகையில் கர்ணன் முதல்நாள் தமிழக வசூலில் பட்டையை கிளப்பி சாதனை படைத்துள்ளது.

பல பிரபலங்களும், ரசிகர்களும் இப்படத்தைப் பார்த்து அதை பாராட்டி வரும் நிலையில், தற்போது கர்ணனை படத்தின் தனுஷ் அமெரிக்காவில் பார்த்துள்ளார்.

தனது நெட்ஃபிக்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு இடையில், தனுஷ் அவரது குடும்பத்தினருடன் லாஸ் ஏஞ்சல்ஸில் கர்ணன் படத்தின் சிறப்பு காட்சியைப் பார்த்துள்ளார். இதனை விநியோகஸ்தர் ஹம்சினி என்டர்டெயின்மென்ட் ஏற்பாடு செய்துள்ளது. கர்ணனை பார்த்த தனுஷ், அதன் அவுட்புட்டில் மகிழ்ச்சியடைந்துள்ளாராம். 50% சதவீத பார்வையாளர்களுடன் இயங்கும் அமெரிக்க திரையரங்குகளில், கர்ணன் நல்ல தொடக்கத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே இயக்குநர்கள் மாரி செல்வராஜ் மற்றும் ராம் ஆகியோருடன் வீடியோ காலில் பேசியுள்ளார் தனுஷ். இதனை மாரி செல்வராஜ் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/mari_selvaraj/status/1380841028350001153