நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தின் பிரமாண்ட தயாரிப்பாக தி க்ரே மேன் என்கிற திரைப்படம் உருவாகிறது. ரயன் காஸ்லிங், க்றிஸ் ஈவன்ஸ் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தை அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார், எண்ட்கேம் உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர்கள் ரூஸோ சகோதரர்கள் இயக்குகின்றனர். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் பிப்ரவரி 9-ம் தேதி ‘தி க்ரே மேன்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக தனுஷ் அமெரிக்க செல்ல இருப்பதாக கூறப்பட்டது.

தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது என்று படத்தின் இயக்குனர் கூட்டணி தெரிவித்துள்ளனர். படத்தின் முதல் நாள் ஷூட்டிங் புகைப்படம் ஒன்றை தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். தனுஷ் ஹாலிவுட் நட்சத்திரங்களுடன் கலக்க வேண்டும் என்று ரசிகர்களும் பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

https://twitter.com/Russo_Brothers/status/1371858919325200391

[youtube-feed feed=1]