சென்னை

ன்னை மகன் எனக் கூறி வழக்குப் பதிந்த மதுரை தம்பதிக்கு ரூ. 10 கோடி இழப்பீடு கோரி நடிகர் தனுஷ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

நடிகர் தனுஷ் தங்களின் மகன் எனக் கூறி மதுரை மாவட்டம் மேலூர் பகுதியைச் சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதியர் மதுரை மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.   மனுவில் தங்களுக்கு தனுஷ் மாதம் ரூ.60 ஆயிரம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தனர். இந்த வழக்கு தள்ளுபடியானதால் கதிரேசன் தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

கதிரேசன் – மீனாட்சி தம்பதியின் வழக்கை ரத்து செய்யக் கோரி, தனுஷ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.  மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், கதிரேசன் தம்பதி மேலூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.  சமீபத்தில் நடிகர் தனுஷுக்கும், கஸ்தூரி ராஜாவுக்கும் கதிரேசன் தம்பதியினர் நோட்டீஸ் அனுப்பினர்

அந்த நோட்டீசில், கஸ்தூரி ராஜா நீதிமன்றத்தில் போலி ஆவணங்களைத் தாக்கல் செய்து உத்தரவு பெற்றதாகவும் குற்றம் சாட்டியிருந்தனர். தற்போது நடிகர் தனுஷ் மற்றும் கஸ்தூரி ராஜா தரப்பில், கதிரேசன் தம்பதிக்குப் பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

அந்த நோட்டீஸில் “தங்களின் மீது கூறிய குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். அவ்வாறு மன்னிப்பு கோராவிட்டால் ரூ.10 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர நேரிடும்.” எனத் தெரிவித்துள்ளனர்.