தேசிய விருது வென்ற இயக்குநரான சேகர் கம்முலா இயக்த்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் ஒரு படத்தில் தனுஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.

தெலுங்கில் ‘டாலர் ட்ரீம்ஸ்’, ‘ஃபிடா’, ‘லீடர்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சேகர் கம்முலா. முதல் படத்திலேயே சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதை வென்றவர்.

பிரம்மாண்ட பொருட்செலவில் நாராயணதாஸ் நரங் மற்றும் புஷ்கர் ராம்மோகன் ராவ் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷ் நாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார். இதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த படத்தின் பட்ஜெட் 120 கோடி என்ற தகவல் ஆச்சரிய அலைகளை எழுப்பியுள்ளது. இந்த படம் பான் – இந்தியன் திரைப்படமாக தயாராகிறது. அதாவது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளுடன் இந்தியிலும் இப்படம் வெளியாகும்.

தற்போது தனுஷ் கார்த்திக் நரேன் படத்தில் நடித்து வருகிறார். ஹைதராபாத்தில் இதன் படப்பிடிப்பு நடக்கிறது. அதற்காக அங்கு தங்கியிருக்கும் தனுஷை சேகர் கம்முலாவும், தயாரிப்பாளர்கள் நாராயண்தாஸ் நரங், சுனில் நரங், பரத் நரங் மற்றும் பி.ராம் மோகன் ஆகியோர் சென்று சந்தித்தனர்.