ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான இந்திப் படம் ‘ராஞ்சனா’.அதற்குப் பிறகு ‘ஷமிதாப்’ படத்தில் நடித்திருந்தார்.
தற்போது மீண்டும் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் உருவாகும் ‘அத்ரங்கி ரே’ இந்திப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் தனுஷ். இதில் அக்ஷய் குமார், சாரா அலிகான் ஆகியோருடன் இணைந்து நடிக்கவுள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் தொடங்கவே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
அக்டோபரிலிருந்து , ‘அத்ரங்கி ரே’ படப்பிடிப்பு மதுரையில் தொடங்கவுள்ளதாகத் தெரிவித்திருந்தார்கள்
‘அத்ரங்கி ரே’ படத்தை டி-சீரிஸ் நிறுவனம் வழங்க கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது. இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் பணிபுரிந்து வருகிறார். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் டிம்பிள் ஹயாதி நடிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
இந்த படத்தின் ஷூட்டிங் இம்மாதம் அக்டோபர் முதல் வாரம் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து தனுஷின் புகைப்படம் ஒன்று வெளியாகி அசத்தி வருகிறது.