மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ராஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் இன்று வெளியாகிவுள்ளது. ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரிந்துள்ளார்.
கொரோனா பயத்தை காற்றில் பறக்கவிட்டு அதிகாலையிலேயே படத்தை காண ரசிகர்கள் திரையரங்கில் திரண்டனர். தமிழகத்தின் அனைத்துத் திரையரங்குகளும் ஹவுஸ்ஃபுல்லாயின.
படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் உள்பட கர்ணன் படக்குழு சென்னை கோயம்பேட்டில் உள்ள திரையரங்கில் முதல்காட்சியை ரசிகர்களுடன் கண்டுகளித்தனர்.
பட்டாசு, பிரமாண்ட கட்அவுட், பாலாபிஷேகம் என்று கர்ணன் திரையரங்குகள் விழாக்கோலம் கொண்டிருந்தன.