சென்னை: தனுஷ் ஒரு சைக்கோ.. அம்மா நடிகைங்களக்கூட விட்டுவைக்க மாட்டான்; அவன் தற்கொலை செய்துகொள்ளலாம் என சுசிலீக்ஸ் புகழ் பின்னணி பாடகி சுதித்ரா பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், நடிகர் தனுஷுக்கு கெட்ட காலம் துவங்கிவிட்டது என ஆவேசமாக தெரிவித்து உள்ளார்.
சமீபத்தில் நயன்தாரா ரூ.3 கோடி தர வேண்டும் என நடிகர் தனுஷ் நோட்டிஸ் அனுப்பியதும், அதற்கு நயன்தார தரப்பில் அவரது கணவர் எதிர்வினையாற்றியதும் சமூக வலைதளங்களில் வைரலானது. இதில், இரு தரப்பினரையும் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர். இதையடுத்து, நயன்தாரா கணவர் தான் போட்ட பதிவை நீக்கினார். இந்த நிலையில், நடிகர் தனுஷ் குறித்து பாடகி சுசித்ரா அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியிட்டள்ளார்.
தென்னிந்தியளவில் முன்னணி நடிகையான நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதிகள் ஆவணப்படம் தயாரித்து வருகின்றனர். தன் வாழ்வில் நடந்த ஒவ்வொரு நல்ல விஷயங்களும் மக்களுக்கு வெளிப்படுத்தும் வண்ணம் நயன்தாரா பியாண்ட் தி ஃபேரிடேல் எனும் ஆவணப்படத்தை உருவாக்கி உள்ளார். இதில், அவரது நடிப்பு உள்பட பல்வேறு தகவல்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆவணப்படத்தில், நயன்தாரா திருமண வாழ்க்கை பந்தத்திற்கு அடித்தளமிட்ட நானும் ரவுடி தான் படத்திலிருந்து சில காட்சிகளை இணைக்க ஆசை தெரிவித்திருந்த நயன்தாரா, ரானும் ரௌடிதான் படத்தின் பாடல் வரிகள் மற்றும் காட்சிகளைப் பயன்படுத்த தயாரிப்பாளர் தனுஷிடம் ஒப்புதல் கேட்டிருக்கின்றனர். ஆனால், தனுஷ் தரப்பிலிருந்து ரூ. 10 கோடி கேட்டதாக விக்னேஷ் சிவன் கூறியதுடன், அது தொடர்பான கடிதத்தையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், தனுஷின் செயல்கள் அனைத்தும் மலிவாக உள்ளது. இனியாவது அவர், மற்றவர்களிடம் அன்பை பரப்பட்டும் என கொந்தளித்து அறிக்கை வெளியிட்டார்.
நடிகர் தனுஷுக்கு எதிராக நடிகை நயன்தாரா வெளியிட்ட அறிக்கை பெரிய அதிர்வுகளைக் கிளப்பியுள்ளது. இதனால், அந்த படத்தின் எந்தவொரு காட்சிகளையும் இசையையும் பயன்படுத்த முடியாமல் போனது. இந்த சம்பவங்கள் தொடர்பாக நெட்டிசன்கள் பல்வேறு தகவல்களை பதிவிட்டு இரு தரப்பினரையும் கழுவி ஊற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், சுசிலீக்ஸ் பாலியல் புகழ் பின்னணி பாடகி நடிகை சுசித்ரா ஊடகம் ஒன்றில் அளித்துள்ள பேட்டியில் நடிகர் தனுசை கடுமையாக விமர்சனம் சய்துள்ளார்.
தனுஷ் ஒரு சைக்கோ. பல வழிகளில் நடிகைகளைப் பழிவாங்குவார். தன்னுடன் இசையவில்லை என்றால் பாலியல் தொல்லைகளைக் கொடுப்பதும் தொழில் ரீதியான நடவடிக்கைகளையும் மேற்கொண்டவர்.
யாரடி நீ மோகினி படப்பிடிப்பில் நயன்தாராவுக்கு தனுஷ் தொல்லை கொடுத்திருக்கிறார். தன் படங்களில் நடிக்கும் அம்மா நடிகைகளைக்கூட விட்டுவைக்காமல் கொடுமை செய்தவர். தனுஷுடன் நடித்த நடிகைகளான பார்வதி, ஸ்ருதி ஹாசன், நஸ்ரியா உள்ளிட்டோரும் நயன்தாராவின் அறிக்கைக்கு விருப்பம் தெரிவித்து உள்ளனர். அவர்களுக்கும் படப்பிடிப்பில் தொல்லைகளைக் கொடுத்திருப்பார்.
தனுஷுக்கு கெட்ட காலம் துவங்கிவிட்டது. அவர் தற்கொலை செய்துகொள்ளலாம்.” என கடுமையாக தாக்கியுள்ளார்.
ஏற்கனவே சுசித்ரா, தனி ஒரு ஆளாக நின்று, தனுஷிற்கும் அவரது கணவர் கார்த்திக்கிற்கும் எதிராக பல புகார்களையும் குற்றங்களையும் கூறி வந்தவர். சினிமா உலகில் நடைபெற்று வரும் பாலியல் தொடர்பான சர்ச்சைகைளை பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். சுசி லீக்ஸ் என்ற பெயரில் திரைத்துரையினரின் மொள்ளமாரித்தனங்களையும் புகைப்படம், வீடியோக்களையும் சமுக வலைதளங்களில் வெளியிட்டு சலசலப்பைஏற்படுத்தி னார். இதனால், சுசித்ராவை அவரது கார்த்திக் இவரை மனம் பிறழ்வு (மனநிலை பாதிக்கப்பட்டவர்) ஏற்பட்டவர் எனவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், நயன்தாராவிற்கு ஆதரவாக சுசித்ரா பேட்டி ஒன்று அளித்துள்ளார். எஸ்எஸ் யூடியூப்பிற்கு அளித்த அந்த பேட்டியில், நயன்தாரா லெட்டரைப் பார்த்தும் எனக்கு உங்கள் நியாபகம் தான் வருகிறது என பலரும் எனக்கு இன்ஸ்டாகிராமில் மெசேஜ் அனுப்பினர். மற்ற நடிகைகளும் கற்றுக் கொள்ள வேண்டும்
தனுஷுடன் நடித்த பல நடிகைகளும் நயன்தாராவின் பதிவிற்கு லைக் செய்துள்ளனர். அவர்கள் லைக் செய்தால் மட்டும் போதாது. நயன்தாராவிடமிருந்து கொஞ்சம் தைரியத்தையும் எடுத்துக் கொண்டு பேச வேண்டும். குறைந்தபட்சம் ஒரு 2 வார்த்தையாவது ட்வீட் செய்ய வேண்டும். நயன்தாரா சொல்வது அனைத்தும் உண்மை. நானும் இதேபோல பலவற்றை அனுபவித்துள்ளேன் என நடிகைகள் கூறலாம்.
ஒரு படத்தை புரொமோஷன் செய்யும் போது பல வார்த்தைகள் நல்ல விதமாக பேசுவர். ஆனால் அதெல்லாம் உண்மை இல்லை எனக் கூறியிருந்தார்.
மேலும், அவர் செய்தி மலர் எனும் யூடியூப் சேனலுக்கும் பேட்டி அளித்துள்ளார்.
அதில்தான் தனுஷை கடுமையான சாடியிருப்பதுடன், தனுஷின் பாலியல் தொல்லைகள், எனக்கும், நயன்தாராவிற்கும் மட்டுமல்ல, அவர் நடித்த முதல் படத்தின் கதாநாயகி தொடர்ந்து தற்போது நடித்து வரும் 50வது படத்தின் நடிகைகள் வரை அனைவருக்கும் தனுஷ் தொல்லை கொடுத்துள்ளார். ஒரு படத்திற்கு 3 பெண் நடிகைகள் எனக் கணக்கிட்டு பார்த்தால் அவரால் கொடுமையை அனுபவித்த நடிகைககளின் பட்டியல் நீண்டு கொண்டே போகும் என கூறியதுடன்,
தனுஷ் ஒவ்வொரு நடிகைகளையும் ஒவ்வொகு விதத்தில் தொல்லை செய்வார். பாலியல் ரீதியாக தொல்லை பண்ண முடியவில்லையா , தொழில் ரீதியாக தொல்லை தரலாம். தொழில் ரீதியாக எதுவும் செய்ய முடியலையா அப்போ அவங்கள பர்சனலா தொல்லை பண்ணலாம். பர்சனலாகவும் எதுவும் பண்ண முடியலையா அப்போ அவங்களோட இமேஜை கெடுத்து விட்டுடுவோம். அவன் ஒரு சைக்கோங்குறதால பல வழியை யோசிச்சு வச்சிருப்பாங்க என மிகவும் மோசமாக தனுஷை விமர்சித்துள்ளார்.