நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தின் பிரமாண்ட தயாரிப்பாக தி க்ரே மேன் என்கிற திரைப்படம் உருவாகிறது. ரயன் காஸ்லிங், க்றிஸ் ஈவன்ஸ் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தை அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார், எண்ட்கேம் உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர்கள் ரூஸோ சகோதரர்கள் இயக்குகின்றனர். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் வரும் பிப்ரவரி 9-ம் தேதி ‘தி க்ரே மேன்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக தனுஷ் அமெரிக்க செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.