மதுரை:

டிகர் தனுஷ் தங்களது மகன் என்று மதுரையை சேர்ந்த தம்பதியினர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் நடிகர் தனுஷ் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில், நடிகர் தனுஷ் தங்களது மகன் என கதிரேசன் தம்பதியினர் தொடர்ந்த வழக்கை மதுரை ஐகோர்ட்டு கிளை இன்று தள்ளுபடி செய்தது.

மதுரை அருகே உள்ள மேலுார்  பகுதியை சேர்ந்த  கதிரேசன், அவரது மனைவி மீனாட்சி ஆகியோர் நடிகர் தனுஷ் தங்களது காணாமல் போன மகன் என்றும், அவர்கள் எங்களுக்கு பராமரிப்புத் தொகை வழங்க உத்தரவிட வேண்டும்,’ என மேலுார் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

மேலுார் நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்,’ என மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நடிகர் தனுஷ்  மனுதாக்கல் செய்தார்.

பரபரப்பான இந்த வழக்கில் பல கட்டமாக விசாரணை நடைபெற்று வந்தது. நடிகர் தனுஷின் அங்க அடையாளங்கள், பள்ளி சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. தனுஷை நேரில் ஆஜராகவும் கோர்ட்டு உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து  கடந்த பிப்ரவரி 28ந்தேதி நடிகர் தனுஷுக்கு  அங்க அடையாள சோதனை நடந்தது.

இது தொடர்பான விசாரணை ஏற்கனவே முடிவடைந்த நிலையில்,  இன்று  தீர்ப்பு வழங்கப்பட்டது.

நடிகர்  தனுஷ் கோரிக்கையை ஏற்று மேலூர் கோர்ட்டில் கதிரேசன் மீனாட்சி தொடர்ந்த வழக்கை நீதிபதி பி.என். பிரகாஷ் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

[youtube-feed feed=1]