நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்டவர் நடிகர் தனுஷ்.

சினிமாவில் எப்போதுமே பிஸியாக வலம் வரும் தனுஷூக்கு ஒய்வு இருக்கும் நேரத்தில் தன் குடும்பத்துடன் அவர் செலவு செய்யும் நேரத்தை புகைப்படங்களாக இணையத்தில் உலா வரும்.

இந்நிலையில் நடிகர் தனுஷ் தற்போது ட்விட்டரில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார். தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை அமைத்திருக்கும் நடிகர் தனுஷின் ட்விட்டர் பக்கத்தில் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை தற்போது கோடியை தாண்டியுள்ளது.

10 மில்லியன் ஃபாலோலர்களை கடந்த முதல் கோலிவுட் ஹீரோ எனும் சாதனையை தற்போது படைத்திருக்கிறார். இந்த சாதனை தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.