திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய 20 மணி நேரம் காத்திருக்க வேண்டி இருப்பதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இலவச தரிசனத்தில் 1 கிலோ மீட்டர் நீளம் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்த பக்தர்கள் பின்னர் வைகுண்டம் கியூ காம்பளக்சில் செல்ல வேண்டிய நிலையில் உள்ளது.

அரையாண்டு தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு என தொடர் விடுமுறையால் வைகுண்டம் கியூ காம்பளக்சில் உள்ள 31 அறைகளும் நிரம்பி வழிகிறது.

300 ரூபாய் சிறப்பு தரிசனம் டிக்கெட் வாங்கியவர்கள் 5 மணி நேரம் காத்திருக்க வேண்டியது உள்ளதாகக் கூறப்படுகிறது.

சாரல் மழை மற்றும் பனிமூட்டத்தையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் பலமணி நேரம் கால்கடுக்க நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.