விருதுநகர்; சதுரகிரி கோவிலுக்கு செல்ல நாளை முதல் 4 நாட்கள் அனுமதி அளித்து விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவித்த உள்ளது.  வைகாசி மாத பௌர்ணமி மற்றும் பிரதேசத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பக்தர்கள் செல்ல கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளது. அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் மட்டுமே மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, நாளை வைகாசி மாத பிரதோஷம் மற்றும் வரும் செவ்வாய்க்கிழமை வைகாசி மாத பவுர்ணிமி காரணமாக, சதுரகிரி மலைக்கு சென்று வழிபட பக்தர்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் வரும் 15ம் தேதி புதன்கிழமை வரை 4 நாட்கள் சுவாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கி உள்ளது. இரவு நேரம் தங்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும், காய்ச்சல், இருமல் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்கும் படியும், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் 60வயதுக்கு மேற்பட்ட முதியோர் மலையேற அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ள கோவில் நிர்வாகம், காலை 7மணி முதல் பகல் 11மணி வரை மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.