மகாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் நாளை பதவியேற்க உள்ளார்.
10 நாட்களுக்கும் மேலாக நீடித்து வந்த இழுபறிக்கு இன்று விடை கிடைத்துள்ளது.
பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட தேவேந்திர பட்நாவிஸ் கூட்டணி கட்சிகளான சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) மற்றும் தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) ஆதரவுடன் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பாஜக கூட்டணிக்கு 230 உறுப்பினர்கள் உள்ளனர்.
இதில் பாஜக-வுக்கு 132 உறுப்பினர்கள் உள்ளனர், தனியாக ஆட்சி அமைக்க தேவையான 145 உறுப்பினர்கள் இல்லாததை அடுத்து 51 உறுப்பினர்களை வைத்துள்ள சிவசேனா மற்றும் 47 உறுப்பினர்களை வைத்துள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவை பாஜக நாடியது.
ஏற்கனவே முதல்வராக பதவி வகித்துவரும் ஏக்நாத் ஷிண்டே தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் அஜித் பவாருக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதை ஏற்க மருத்துவந்ததாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில் தேவேந்திர பட்நாவிஸ் நாளை பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் துணை முதல்வர் பதவி ஒருவருக்கு மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.