நாக்பூர்
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஔரங்கசீப் கல்லறை குறித்து பேட்டி அளித்துள்ளார்.
முகலாய மன்னர் ஔரங்கசீப் கல்லறையை அகற்ற இந்தி அமைப்புகள் போராட்டம் நடத்திய போது குரானை எரித்ததாக ஒரு வதந்தி பரவி அதனால் நாக்பூரில் கலவரம் வெடித்தது. வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர நாக்பூரில் பகுதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு தற்போது நிலைமை சரியாகி உள்ளது.
நேற்று நாக்பூரில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்களுக்கு,
“நாம் ஔரங்கசீப்பை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அவரது கல்லறை ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னம் தான். ஆனால் அவரை யாரும் பெருமைப்படுத்தி பேசுவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இருப்பினும் அங்கு சட்டத்தின் எல்லைக்கு அப்பாற்பட்ட கட்டமைப்புகள் இடித்து அகற்றப்பட வேண்டும்.
தேவையான இடங்களில் மராத்தி மொழியை பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துவதில் எந்த தவறும் இல்லை. இருப்பினும் அதற்காக யாரும் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொள்ள கூடாது”
என்று பேட்டி அளித்துள்ளார்