சென்னை: வரும் 30ந்தேதி தேவர் குருபூஜை நடைபெற உள்ளதால், தேவர் திருமகனார் சிலைக்கு நேரில் சென்று  மரியாதை செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தேவர் குருபூஜையின்போது பல ஆயிரக்கணக்கான  பேர் பசும்பொன் வருகை தந்து, அங்குள்ள  தேவர்  சிலைக்கு மரியாதை செய்வது வழக்கம், அவ்வாறு வருபவர்கள் இளைப் பாறும் வகையில்,  பசும்பொன்னில் ரூ. 1.55 கோடியில்  பிரமாண்டமான  முத்துராமலிங்க தேவர் அரங்கம்  தமிழ்நாடுஅரசால் கட்டப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தை இன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 117-ஆவது ஜெயந்தி விழா, 62-ஆவது குருபூஜை விழா வருகிற 30-ஆம் தேதி நடைபெற உள்ளது.  இந்த குருபூஜை விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள இருப்பதாகஅறிவிக்கப்பட்ட உள்ளது‘ மேலும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி,  டிடிவி தினகரன், சசிகலா என பல கட்சியினர், பசும்பொன் செல்ல இருப்பதால்,   ராமநாதபுரம்  மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதையொட்டி மதுரை செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், மதுரை, கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராலிங்கத் தேவர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு,   மதுரை, தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது சகோதரர்களின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார். அதைத்தொடர்ந்து, . அங்கிருந்து ராமநாதபுரம் மாட்டம், பசும்பொன் செல்லும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்துவார் என கூறப்படுகிறது.

முதலமைச்சர் ஸ்டாலின் மதுரை, ராமநாதபுரம் வருகையையொட்டி, முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும், 12 ஆயிரம் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.