ஸ்ரீ சாந்த துர்கா சன்னிதானம் காவலே, பாண்டா, கோவா
கோவாவின் பாண்டா வட்டத்தில் காவலே கிராமத்தின் அடிவாரத்தில் ஸ்ரீ சாந்த துர்கா கோயில் அமைந்துள்ளது. ஒரு சிறிய களிமண்ணிலான ஆலயம் கட்டப்பட்டு, துர்க்கை அம்மன் இங்கு நிறுவப்பட்டது. மண் சன்னதியாலான ஒரு அழகான கோயிலாக அமையப்பெற்றது.
அதன் அஸ்திவாரம் 1730 இல் போடப்பட்டது. மற்றும் 1738 ஆம் ஆண்டில் கோயில் கட்டி முடிக்கப்பட்டு 1966 இல் புதுப்பிக்கப்பட்டது.
விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்யும் தெய்வம் சாந்த துர்கைக்காக இவ்வாலயம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த துர்க்கை அம்மன் சாந்தேரி’ என்றும் அழைக்கப்படுகிறது.
தல வரலாறு
உள்ளூர் புராணக்கதைகள் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் இடையிலான சண்டையைப் பற்றிக் கூறுகின்றன. போர் மிகவும் கடுமையான போது பிரம்மா கடவுள் பார்வதி தேவியிடம் தலையிடப் பிரார்த்தனை செய்தார், அதை அவர் சாந்த துர்கா வடிவத்தில் செய்தார். சாந்த தூர்கா விஷ்ணுவையும் வலது கையில் சிவனையும் இடது கையில் வைத்து சண்டையைத் தீர்த்துக் கொண்டார் என்பது வரலாறு.