சென்னை
வரும் 22 ஆம் தேதி பராமரிப்பு பணிகள் காரணமாக சில ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”பராமரிப்பு பணிகள் காரணமாகக் கீழ்க்கண்ட ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
விஜயவாடா- சென்னை சென்ட்ரல் இடையே (12711) காலை 6.10 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் 22ம் தேதி கூடூர்- சென்னை சென்ட்ரல் இடையேயும், சென்னை சென்ட்ரல்- விஜயவாடா இடையே இயக்கப்படும் பினாகினி எக்ஸ்பிரஸ் (12712) பிற்பகல் 2.10 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை சென்ட்ரல்- கூடூர் இடையே 22ம் தேதி ரத்து செய்யப்படுகிறது
தவிர நெல்லூர்-சூலூர்பேட்டை இடையே (06746) காலை 10.15 மணிக்கு இயக்கப்படும் ரயில், சூலூர்பேட்ைட- நெல்லூர் இடையே (06745) காலை 7.45 மணிக்கு இயக்கப்படும் ரயில், சூலூர்பேட்டை- மூர்மார்க்கெட் இடையே (06742) பிற்பகல் 12.35 மணிக்கு இயக்கப்படும் ரயில், மூர்மார்க்ெகட்- சூலூர்பேட்ைட இடையே (06741) காலை 4.25 மணிக்கு இயக்கப்படும் ரயில், ஆவடி- மூர்மார்க்கெட் இடையே (66000) காலை 4.25 மணிக்கு இயக்கப்படும் ரயில், மூர்மார்க்கெட்- ஆவடி இடையே (6603) இரவு 9.15 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் 22ம் தேதி ரத்து செய்யப்படுகிறது.”
எனக் கூறப்பட்டுள்ளது.