அறிவோம் தாவரங்களை – மகோகனி மரம்
மகோகனி மரம் (Swietenia Macrophylla)
ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள் உன் தாயகம்!
டைனோரஸ் காலந்தொட்டு காணப்படும் பழமை மரம் நீ!
நீர் வளம் மிகுந்த பகுதிகளில் நிறைய வளரும் அருமை மரம் நீ!
100 அடி வரை உயரம் வளரும் நூதன மரம் நீ!
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் அதிகம் வளரும் அற்புத மரம் நீ!
வயிற்றுப்போக்குக்கு ஏற்ற மருத்துவ நிவாரணி நீ!
நிலைக் கதவுகள், ஜன்னல்கள், அலமாரி, கப்பல் கட்டும் பணி, படகுகள், இசைக்கருவிகள், விமான ஒட்டுப் பலகைகள், பென்சில் ஆகியவை செய்யப் பயன்படும் அற்புத மரம் நீ!
அமெரிக்க வெள்ளை மாளிகை, இங்கிலாந்து, பக்கிங்காம் அரண்மனைகளுக்கு அழகு சேர்க்கும் அற்புத மரமே!
காய், கனி, விதை, இலை என எல்லாம் பயன்படும் நல்ல மரமே காற்றைத் தடுக்கும் வேலி மரமே!
வரப்புகளில் நடப்படும் வளம் மிகு மரமே!
பத்தாண்டுகளில் ரூபாய் 15,000 வரை விலை போகும் கற்பக மரமே!
விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யும் வினோத மரமே!
தேக்கு மரம் போன்ற வலிமைமிகு மரமே!
உலகின் பழமையான பழுத்த மரமே!
நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க! உயர்க!
நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)
நெய்வேலி.
📱9443405050.