திருவரங்கத்தில் எல்லாமே பெரிது
திருவரங்கம் கோயில் பெரிது ஆகையால் பெரிய கோயில். இராம பிரானே தொழுத பெருமாள் ஆகையால் பெரியபெருமாள். இந்த கோவில் கோபுரம் ஆசியாவிலேயே பெரிய கோபுரம் ஆகும்.
இங்கிருந்த ஜீயர் பெரிய ஜீயர். இங்கிருந்த ஆச்சாரியார் பெயர் பெரிய நம்பி. அரங்கநாயகி தாயாரின் பெயர் பெரியபிராட்டி. இங்கு செய்யப்படும் பிரசாதங்களுக்கு பெரிய அவசரம் என்று பெயர்.
இங்குள்ள மேளத்திற்கு பெயர் பெரியமேளம். இங்கு தயாரிக்கப்படும் பட்சணத்திற்கு பெரிய திருப்பணியாரம் என்று பெயர். பெருமாளுக்கு மாமனார் ஆனவர் பெரியாழ்வார்.
இரண்டாக பிரிந்து ஓடும் காவிரியும் கொள்ளிடம் தமிழ்நாட்டின் பெரிய நதிகள்.
ஆழ்வார்களின் மங்களாசாசனம் பெரிய மங்களாசாசனம். (11 ஆழ்வார்கள் 247 பாசுரங்கள் )
இப்படியெல்லாம் உண்மையிலேயே பெரிதாக இருப்பது சிறப்பு என்றால், இங்குள்ள கருடாழ்வார் தான், இந்தியாவிலேயே மிகப்பெரிய கருடாழ்வார்.