அறிவோம் தாவரங்களை – அரிவாள்மணை பூண்டு செடி
அரிவாள்மணை பூண்டு செடி (Sida acuta)
நடு அமெரிக்கா உன் தாயகம்!
செம்மண் நிலம், தென்னந்தோப்பு, சாலையோரங்களில் தானே முளைத்திருக்கும் களைச்செடி நீ!
உன் இன்னொரு பெயர் அரிவாள் மூக்குப் பச்சிலை!
இந்தியா, இலங்கையில் எங்கும் காணப்படும் பசுமைச் செடி நீ!
30 செ.மீ. வரை உயரம் வளரும் முதன்மைச் செடி நீ!
சிறுநீரக நோய்கள், குருதி கசிவு, நரம்புத்தளர்ச்சி, மறதி, தகாத உடல் உறவால் ஏற்படும் தொற்று நோய்கள், உடல் சோர்வு, தொண்டை வறட்சி, தொண்டைக்கம்மல், உடல் எரிச்சல், இரத்தப் பெருக்கு, விஷக்கடி, படர் தாமரை, வெட்டுக்காயங்கள் ஆகியவற்றிற்கு ஏற்ற மூலிகை நிவாரணி நீ!
ஆப்பிரிக்கா, நைஜீரியா பாரம்பரிய மருத்துவத்தில் மலேரியா மற்றும் கருக்கலைப்புக்குப் பயன்படும் கவின்மிகு செடியே!
விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யும் விந்தை செடியே!
ஆண்டு முழுவதும் வளர்ந்திருக்கும் அற்புதச் செடியே!
பல் போன்ற கூர்மையான இலைகளை உடைய இனிய செடியே!
கசப்புத் தன்மை கொண்ட மருந்து செடியே!
‘பாலா’எனச் சிறப்புப் பெயர் கொண்ட வணிகச் செடியே!
காய்ந்தபின் ஒரு டன்₹8000. வரை விலை போகும் பணப் பயிரே!
தோட்டத்தைப் பெருக்கப் பயன்படும் துடைப்பான் செடியே!
நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க! உயர்க!
நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)
முதல்வர்
ஏரிஸ் கலைக் கல்லூரி,
வடலூர்.📱9443405050.