அறிவோம் தாவரங்களை – சவ்சவ் கொடி
சவ்சவ் கொடி. Sechium edule.
தென் அமெரிக்கா உன் தாயகம்!
உன் இன்னொரு பெயர் ‘பெங்களூர் கத்திரிக்காய்!’
கொடி வகையைச்சேர்ந்த செடி நீ!
மலை அடிவாரத்தில் அதிகமாய் விளையும் உணவுக் காய்ச் செடி நீ!
ஐரோப்பியர் மூலம் அறிமுகமான அழகு கொடிநீ!
கொழுப்புக்குறைப்பு, ரத்த சோகை, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி, கர்ப்பிணி பெண்கள் கை கால் வீக்கம், தைராய்டு பிரச்சனை, குழந்தை நலம், புற்று நோய், வயிற்றுக் கொழுப்பு, மனச்சோர்வு ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!
சாம்பார், கூட்டு, சட்னி, வறுவல், பொரியல், சூப் என எல்லா வகையிலும் பயன்படும் நல்ல காய் செடியே!
பச்சை,வெள்ளை நிற காய் கொடுக்கும் பசுமை கொடியே!6.மாதத்தில் காய் கொடுக்கும் பணப்பயிரே!
5 ஆண்டுகள் வரை பலன் தரும் அற்புத கொடியே!
ஆண்டிற்கு சுமார் 30 கிலோ வரை காய் கொடுக்கும் முதன்மை கொடியே!
பந்தலில் படரும் சந்தனமே!
நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க!உயர்க!
நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்
நெய்வேலி.
📞9443405050