அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில், பெண்ணாடம், கடலூர் மாவட்டம்.
பெண் + ஆ + கடம் = பெண்ணாகடம் மருவி பெண்ணாடம் ஆனது. பெண் என்பது தேவகன்னியர்களைக் குறிக்கும். ஆ என்பது காமதேனுவைக் குறிக்கும். கடம் என்பது வெள்ளை யானையைக் குறிக்கும். இந்த மூவரும் வணங்கிய திருத்தலம் பெண்ணாடம்.
நாவுக்கரசர் மற்றும் ஞானசம்பந்தரால் தேவாரம் பாடப்பெற்ற திருத்தலம் பெண்ணாடம்.
திருநாவுக்கரசருக்கு சிவபெருமான் இடபக் குறி – திரிசூல முத்திரை பதித்த திருத்தலம் பெண்ணாடம்.
அறுபத்து மூவரில், கலிக்கம்ப நாயனாரின் திரு அவதாரத் திருத்தலம் பெண்ணாடம்.
சிவஞானபோதம் அருளிய மெய்கண்ட தேவ பெருமான் திரு அவதாரத் திருத்தலம் பெண்ணாடம்.
சந்தானக் குரவர்களில் மூன்றாமவரான மறைஞானசம்பந்தரின் திரு அவதாரத் திருத்தலம் பெண்ணாடம்.
பிரளயத்தினால் ஊழிக்கால கால வெள்ளம் பெருக்கெடுத்தபோது மூழ்காது உயர்ந்து நின்ற திருத்தலம் பெண்ணாடம்
சைவமும் தமிழும் தழைத்தோங்கிய வெள்ளாற்றுக்கும் பெண்ணையாற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் வெள்ளாற்றங்கரையில் அமைந்திருக்கும் திருத்தலம் பெண்ணாடம்.
ஸ்ரீ பிரளயகாலேஸ்வரர் அருள்பாலிப்பதாலேயே ஊழிக்கால பிரளயத்தின் போது மூழ்காது உயர்ந்து நின்றதாக தேவர்களால் நம்பப்பட்ட திருத்தலம் பெண்ணாடம்.
தேவர்களின் வேண்டுதலை ஏற்று ஸ்ரீ பிரளயகாலேஸ்வரர் பிரளயகால ஊழி வெள்ளத்திலிருந்து உலகம் உய்ய நந்திகேஸ்வரருக்கு ஆணையிட்ட திருத்தலம் பெண்ணாடம்.
அதுவரை ஸ்ரீ பிரளயகாலேஸ்வரரை நோக்கியவாறு அமர்ந்திருந்த நந்திகேஸ்வரர், ஊழிக்கால பிரளய வெள்ளத்தை தடுக்க வேண்டி கிழக்கு நோக்கி திரும்பி ஊழி வெள்ளத்தை உறிஞ்சி உலகைக் காத்த நஸ்திகேஸ்வரர் இன்று வரையிலும் கிழக்கு நோக்கியவாறு அதிகார நந்தியாக அருள்பாலிக்கும் திருத்தலம் பெண்ணாடம்.
சிவனடியார் ஒருவரால் கலிக்கம்பரின் மனைவியின் துண்டிக்கப்பட்ட கையை மீண்டும் வழங்கியதால் கைவழங்கீசர் என்று போற்றப்படும் ஸ்ரீ பிரளயகாலேஸ்வரர் அருள்பாலிக்கும் திருத்தலம் பெண்ணாடம்.
கர்ப்பகிரகத்தின் முன் பக்க வாயில் தவிர ஏனைய மூன்று பக்கங்களிலும் பலகனி வழியாக தரிசிக்கும் வாய்ப்பளித்துள்ள ஸ்ரீ பிரளயகாலேஸ்வரர் அருள்பாலிக்கும் திருத்தலம் பெண்ணாடம்.
கை சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் தீரும் என்று சிவ பக்தர்களால் நம்பப்படும் திருததலம் பெண்ணாடம்.
விருத்தாசலம்–திட்டக்குடி சாலையில் விருத்தாசலத்திலிருந்து சுமார் 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திருத்தலம் பெண்ணாடம்.