அறிவோம் தாவரங்களை – ஆம்பல்

ஆம்பல் (Nymphaea pubescens)

ஆழமற்ற ஏரிகள், குளங்கள், அருவிகள், வயல்களில் வளரும் நீர்த்தாவரம் நீ!

உன் இன்னொரு பெயர் அல்லி!

வங்கதேசத்தின் தேசிய மலர் நீ!

பாரதம், இலங்கை, ஆசியா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படும் கவின்மலர் கொடி நீ!

இரவில் மலரும் இனிய பூங்கொடி நீ!

எகிப்து நாட்டு வெண்ணிற அல்லி  காலையில் மலர்ந்து இரவில் குவியும் இனிய பூங்கொடி நீ!

சிவப்பு, ஊதா, வெள்ளை நிறப் பூப்பூக்கும் நல்ல கொடி நீ!

வங்காளத்தில் நீ ஷாப்ளா!

ஹிந்தியில் நீ கோகா!

சமஸ்கிருதத்தில் நீ குமுதம்!

புண்கள், சிறுநீர் பாதை, உட்காய்ச்சல், குடல்புண், வயிற்றுப்போக்கு, மூலம், கண் குளிர்ச்சி, உடல் எரிச்சல், கட்டிகள், இதயபலம் ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!

உணவாகப் பயன்படும் கிழங்கு நீ!

நச்சினார்க்கினியர், அவ்வையார் போற்றும் நல்ல கொடி நீ!இசைக்கருவி செய்ய தண்டு கொடுக்கும் இனிய தண்ணீர்க் கொடிநீ!

சங்க இலக்கியங்கள் போற்றும் சரித்திரப் பூங்கொடியே!

‘கரும்பு நடு பாத்திக் கலித்த ஆம்பல்’ என ஐங்குறுநூறு(65) போற்றும் அற்புதக் கொடியே!

ஆடவர் நெஞ்சில் பூசச் சாந்து தரும் அழகு கொடியே!

வளையலாக அணியப்படும் களைக் கொடியே!

நீர்மேல் மிதந்து கிடக்கும் வட்ட வடிவ இலை கொடியே!

நீண்ட காம்புகளைக் கொண்ட ஆம்பல் கொடியே!

தண்ணீருக்கு உள்ளே வளரும் தண்டுக்கொடியே!

கூம்பு நிற்பது போன்று  தோன்றும் ஆம்பல் மலரே!

நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க! உயர்க!

நன்றி  : பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)

முதல்வர்

ஏரிஸ் கலைக் கல்லூரி,

வடலூர்.📱9443405050.