அறிவோம் தாவரங்களை – முசுமுசுக்கை

முசுமுசுக்கை (Mukia maderaspatana)

தமிழகம் உன் தாயகம்!

வேலிகள், புதர்கள், சாலை ஓரங்களில் படர்ந்து இருக்கும் மூலிகைச் செடி நீ!

இரு குரங்கின் கை,மொசுமொசுக்கை, முசுக்கை என மூவகைப் பெயர்களில் விளங்கும் முதன்மைக் கொடி நீ!

துவர்ப்புச் சுவையும் கார்ப்புச் சுவையும் கொண்ட முதன்மைக் கொடி நீ!

சைனஸ், நுரையீரல், சுவாச கோளாறு , சுவாசக் குழல் அழற்சி, கபம், உடல் சூடு, கண் எரிச்சல், வழுக்கை, சளி, இருமல், வயிற்றுப் பொருமல், கொழுப்புக் குறைப்பு, ஆஸ்துமா, இளநரை, பித்தம், உயர் ரத்த அழுத்தம், காச நோய், அஜீரணம் ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!

அப்பம், அடை, தோசை, சட்னி எனப் பல்வகையில் பயன்படும் உணவு இலை நீ!

கசாயம், சாறு, தைலம், சூரணமாய் நோய்களைத் துரத்தியடிக்கும் காவலன் நீ!

குறட்டையை விரட்டும் இலைகொடியே!

சித்த மருத்துவத்தில் பயன்படும் சிறப்புக் கொடியே!

தொற்றிப்படரும் பற்றுக் கொடியே!

முக்கோண வடிவ இலைக் கொடியே!

காம்பு இல்லாத செங்கனிக்கொடியே!

சொரசொரப்பான இலை தண்டுகளை உடைய சுந்தரக் கொடியே!

மழைக்கால நோய்களை விரட்டும் மகிமைக் கொடியே!

பாட்டி வைத்திய பாரம்பரியமே!

நுரையீரலின் துப்புரவாளனே!

உடலுக்கு வலிமையைத் தரும் உன்னதச் செடியே!

மஞ்சள் நிறப் பூப் பூக்கும் மருந்து கொடியே!

முட்களும், சுனை தன்மையும் கொண்ட காய்,இலை கொடியே!

நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க! உயர்க!

நன்றி : பேரா.முனைவர்.

ச.தியாகராஜன்(VST)

நெய்வேலி.

📱9443405050.